பாடகி ரிஹானா நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பிய இந்தியா.. நன்றி தெரிவித்து பார்படாஸ் பிரதமர் கடிதம்..
இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாப் பாடகி ரிஹானாவின் சொந்த நாடான பார்படாஸூக்கு இந்தியா கோவிட் தடுப்பூசி அனுப்பி வைத்துள்ள நிலையில், மோடிக்கு அந்நாட்டு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து ஏறத்தாழ 3 மாதங்களுக்கும் மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில், சட்டத்தை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தொடர்போராட்டத்தில்ஈடுபட்டுவரும்விவசாயிகளுக்குஇந்தியாஅளவில்மட்டுமல்லாதுஉலகளவில்இருந்தும்ஆதரவுகுரல்கள்எழத்தொடங்கியுள்ளன. குறிப்பாக, பாப்பாடகிரிஹானா, மியாகலிஃபா, கிரேட்டாதன்பெர்க்உள்ளிட்டோர்விவசாயிகளுக்காகஆதரவுதெரிவித்தது, உலகளவில்மிகப்பெரியகவனத்தைஈர்த்தது. இந்தியாவில்சர்ச்சையாகஉருவெடுத்தது.