ஹோம் /நியூஸ் /கொரோனா /

100 கோடி மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி - வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!

100 கோடி மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி - வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!

100 கோடி மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி

100 கோடி மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி

இந்த சாதனையை முன்னிட்டு, இந்தியாவின் தொல்பொருள் துறையின் கீழ் உள்ள அனைத்து முக்கிய புராதன சின்னங்களும் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவின் வரலாற்று சாதனையை முன்னிட்டு, மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு தனிப்பட்ட ஹாஷ்டாக் மற்றும் ரிவர்சாக சுற்றும் ஒரு டிஜிட்டல் கடிகாரத்தை உருவாக்கியுள்ளது. கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தொடும் நிலையில், இலக்கை அடைய எஞ்சியிருக்கும் தடுப்பூசி அளவைக் காட்டும் டிஜிட்டல் கடிகாரமும், #VaccineCentury என்ற பிரத்யேக ஹாஷ்டாகும் வரலாற்று சாதனையை பறைசாற்றும் வகையில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று காலை, 10.35 மணிக்கு, 100 கோடி தடுப்பூசிகள் வழங்கி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. கோவிட் வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த, தேசிய அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் திட்டத்தயை இந்த ஆண்டு துவக்கத்தில் தொடங்கி வைத்தார், நமது பிரதமர் நரேந்தர மோடி அவர்கள். தற்போது, எந்த நாடுமே செய்யாத அளவுக்கு, கோவிட் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தியோடு மட்டுமல்லாமல், வெற்றிகரமாக தடுப்பூசியும் வழங்கப்பட்டு, நாட்டு மக்கள் நலனுக்காக பாடுபட்ட அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும், உதவி செய்தவர்களுக்கும், பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

திரு. மோடி, தனது அதிகாரபூர்வமான டிவிட்டர் கணக்கில், “வரலாற்று சாதனை படைத்தது இந்தியா. இந்திய அறிவியலின் வெற்றியையும், 130 கோடி இந்தியர்களின் ஒருங்கிணைந்த மன உறுதியையும் இங்கே கண்கூடாகப் பார்க்கிறோம். 100 கோடி தடுப்பூசி வழங்கி மிகப்பெரிய சாதனை படைத்த இந்தியாவுக்கு நன்றி! இதை சாத்தியபடுத்திய, அதற்காக கடினமாக உழைத்த மறுத்தவர்கள், நர்ஸ்கள், மற்றும் உதவியாளர்களுக்கு எனது பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பகிர்ந்திருந்தார்.

இந்த சாதனையை முன்னிட்டு, இந்தியாவின் தொல்பொருள் துறையின் கீழ் உள்ள அனைத்து முக்கிய புராதன சின்னங்களும் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்த மைல்ஸ்டோனின் கொண்டாட்டமாக,100 மாவட்டங்களில், 100 கலைஞர்கள் பல்வேறு விதமாக பணியாற்றிக்கொண்டு வரும் அதே நேரத்தில், இந்தியத் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றிணைந்து ஒலியெழுப்பி கொண்டாட இருக்கின்றன. அதே நேரத்தில், சாதனையின் முக்கியமான கொண்டாட்டம், டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடை பெற இருக்கிறது. நீளமான தேசியக் கோடி ஏற்றப்பட்டு, தடுப்பூசியின் பற்றிய முக்கிய விவரங்கள் ஒரு குறும்படமாக இந்த கொண்டாட்டத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றது.

India scripts history
100 கோடி மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி

அலங்கரிக்கப்பட்ட புராதன சின்னங்களில் அந்தமான் செல்லுலார் சிறை, பீகாரில் உள்ள நவ நாளந்தா மகாவிஹாரா மற்றும் ஷேர் ஷா சூரியின் கல்லறை, சத்தீஸ்கர் மாவட்ட ராய்பூர் சர்க்கிள், சண்டிகர் கேபிடல் வளாகம், குஜராத்தின் அஸ்தோடியா கேட் மற்றும் சூரிய கோவில், இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா கோட்டை, கார்நாடகாவில் உள்ள திப்பு சுல்தான் அரண்மனை, கேரளாவின் பீக்கல் கோட்டை, மத்திய பிரதேச குவாலியர் கோட்டை, மகாராஷ்டிரா ஆகா கான் அரண்மனை, மணிப்பூரில் உள்ள விஷ்ணு கோவில், நாகாலாந்து திமாபூர் கோட்டை, டெல்லியின் குதுப் மினார், கோனார்க் சூரியன் கோவில், ராஜஸ்தான் மாநில கும்பல்கர் கோட்டை, தமிழ்நாட்டின் வேலூர் கோட்டை, தெலுங்கானா மாநில கோல்கொண்டா கோட்டை, ஜம்மு & காஷ்மீர் பழங்கால கோட்டை, உத்தர பிரதேசம் ஃபதேபூர் சிக்ரி, மற்றும் மேற்கு வங்கத்தின் மெட்கால்ஃப் ஹால் ஆகியவை அடங்கும்.

First published:

Tags: Corona Vaccine, Covid-19