• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • covid in India | இந்தியாவில் குறையத் தொடங்கிய கொரோனா : தினசரி பாதிப்பு நேற்று 3 லட்சத்துக்கும் குறைவு- 4,106 பேர் இறப்பு

covid in India | இந்தியாவில் குறையத் தொடங்கிய கொரோனா : தினசரி பாதிப்பு நேற்று 3 லட்சத்துக்கும் குறைவு- 4,106 பேர் இறப்பு

கொரோனா

கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 4,106 என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    ஏப்ரல் 21ம் தேதிக்குப் பிறகு நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதன்முறையாஅ 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது, ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 4,106 என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளநிலையிலும், பலி எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 386 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 49 லட்சத்து 65 ஆயிரத்து 463 ஆக உயர்வடைந்து உள்ளது.

    கொரோனா பாதிப்பால் நாட்டில் 4,106 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,74,390 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 076 ஆக உயர்வடைந்து உள்ளது.

    கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 35,16,997 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 460 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

    இந்தியாவில் இதுவரை 31 கோடியே 64 லட்சத்து 23 ஆயிரத்து 658 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 15,73,515 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

    தற்போது கொரோனா 2ம் அலை புறநகர் பகுதிகள், கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் பகுதிக்கும் பரவியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: