ஹோம் /நியூஸ் /கொரோனா /

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மோசம், கவலையளிக்கிறது: 3-வது அலையை கணித்த விஞ்ஞானி கவலை

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மோசம், கவலையளிக்கிறது: 3-வது அலையை கணித்த விஞ்ஞானி கவலை

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்தியாவில் கொரோனா பரவல் விதம் கவலையளிப்பதாக உள்ளதாக முன்னாள் ஹைதராபாத் பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா கவலை வெளியிட்டுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ewsஇந்தியாவில் கொரோனா பரவல் விதம் கவலையளிப்பதாக உள்ளதாக முன்னாள் ஹைதராபாத் பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா கவலை வெளியிட்டுள்ளார்.

இவர்தான் ஜூலை 4ம் தேதியன்று நாட்டில் கொரோனா 3வது அலை அடிக்கும் என்று கணித்திருந்தார்.

டாக்டர் விபின் கவலையின் காரணம் தினசரி கொரோனா மரணங்கள்தான். ஜூலை 4 முதல் மரண விகிதம் தொடர்ந்து சீராக இருந்து வருகிறது என்கிறார் டாக்டர் விபின். அதிகாரப்பூர்வ மரண விகிதங்களை மீறி கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகமாகவே உள்ளன என்கிறார் டாக்டர் விபின். இதனால் 3வது அலை மோசமான நிலைக்குச் செல்லும் என்று எச்சரித்துள்ளார்.

Also Read: Corona Virus| 11 ஆயிரத்திலிருந்து மீண்டும் 1 லட்சமாக அதிகரிப்பு: அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா

“தினசரி மரண எண்ணிக்கைச் சுமை ஜூலை 4ம் தேதி முதல் பயங்கரமாக மாறுபாடு கொண்டுள்ளது. இந்த மரண விகித மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் கொரோனா மரணங்கள் இன்னும் ஒரு மாதமாகியும் செட்டில் ஆகவில்லை என்று தெரிகிறது” என்று ஆங்கில நாளேட்டில் கூறியுள்ளார் விபின் ஸ்ரீவஸ்தவா.

முதல் அலையின் போதே மரண விகித எண்ணிக்கை அதிகாரப்பூர்வ தகவல்களில் அட்ஜஸ்ட் செய்யப்பட்டது. முதல் அலை கொரோனா புள்ளி விவரங்கள் ஏற்படுத்திய சந்தேகம் 2வது அலையில் வெட்ட வெளிச்சமானது. இரண்டாவது அலையில் உயிரிழப்புகள் கடுமையாக அதிகரித்தது.

அவர் மேலும் கூறும்போது, தினசரி பாதிப்பு லட்சக்கணக்கில் இருந்த போது கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் லட்சக்கணக்காக இருந்தது, பாதிப்பு எண்ணிக்கை ஆயிரங்களில் இருந்த போது குணமடைந்தோர் விகிதமும் அரசு தகவல்களின் படி ஆயிரமாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் உண்மையில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையே குணமடைந்தோர் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இப்படியிருக்கையில் மரண விகிதம் மட்டும் 500-ஐ சுற்றியே உள்ளது, இது எப்படி இருக்க முடியும் என்று டாக்டர் விபின் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

First published:

Tags: Corona death, News On Instagram