இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் தொற்றால் அதிர்ச்சி : பிரிட்டனிலிருந்து வந்திறங்கிய 33,000 பேருக்கும் மருத்துவச் சோதனை

இந்தியாவில் 6 பேருக்கு புதுவகை கொரோனா வைரஸ் தொற்று.

பிரிட்டனிலிருந்து திரும்பிய 6 பேரின் சாம்பிள்கள் சோதிக்கப்பட்ட போது பிரிட்டனில் பரவி வரும் அதே உருமாறிய புதுவகை கொரோனா ஸ்ட்ரெய்ன் இருப்பது தெரியவந்தது.

 • Last Updated :
 • Share this:
  பிரிட்டனை உலுக்கி வரும் உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது, பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களில் 6 பேருக்கு சோதனை செய்த போது இந்த புதுவகை கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது தெரியவந்துள்ளதால் கவலை ஏற்பட்டுள்ளது.

  இந்த 6 மாதிரிகளில் பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் சோதனைச்சாலையில் பரிசோதிக்கப்பட்ட 3 மாதிரிகளிலும் ஹைதராபாத்தில் உள்ள சிசிஎம்பி சோதனைச்சாலையில் சோதிக்கப்பட்ட 2 மாதிரிகளிலும் புனேயில் உள்ள என்.ஐ.வி.யில் சோதிக்கப்பட்ட மாதிரி ஒன்றிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

  25 நவம்பர் முதல் 23 டிசம்பர் வரை 33,000 பயணிகள் பல்வேறு இந்திய விமான நிலையங்களில் வந்து இறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரையும் தடம் கண்டு இவர்களுகு ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட்டது, இதில் 114 பேருக்கு கொரோனா பாசிட்டிவ். இந்த 114 பாசிட்டிவ் சாம்பிள்கள் மரபணு தொடர் வரிசைமுறைப்படுத்தப்பட பல்வேறு சோதனைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டது.

  இதில் பிரிட்டனிலிருந்து திரும்பிய 6 பேரின் சாம்பிள்கள் சோதிக்கப்பட்ட போது பிரிட்டனில் பரவி வரும் அதே உருமாறிய புதுவகை கொரோனா ஸ்ட்ரெய்ன் இருப்பது தெரியவந்தது.

  இந்த 6 பேரும் அந்தந்த மாநில அரசின் குறிப்பிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் பழகியவர்கள் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  33,000 பேர் பிரிட்டனிலிருந்து வந்திறங்கியதால் அனைவரையும் அவர்கள் தொடர்புடையவர்களையும் தடம் காணும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது,

  மரபணு வரிசைப்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  சூழ்நிலை கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பரவலைக் கட்டுப்படுத்தவும், சோதனை செய்யவும், மாதிரிகளை இன்சாகாக் சோதனைச்சாலைகளுக்கு அனுப்பவும் அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

  டென்மார்க், ஹாலந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஏற்கெனவே இந்த புதுவகை கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
  Published by:Muthukumar
  First published: