இந்தியாவில் இந்த ஆண்டின் அதிகபட்ச கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் பதிவு...

கொரோனாவின் புதிய அறிகுறிகள்

இந்தியாவில் நடப்பு ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,854 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கடந்தாண்டு டிசம்பர் 25 ம் தேதி 22,273 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. அதன்பிறகு 2021ல் 2 முறை மட்டுமே 20,000 க்கும் அதிகமான பாதிப்பு ஜனவரி மாதத்தில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் 3 மாதங்களில் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,854 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதில் மகாராஷ்டிராவில் மட்டும் ஒரு நாள் பாதிப்பு 13,000க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவாகும். அங்குள்ள தானே மாவட்டத்தில் 5 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மார்ச் 15ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க... தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 671-ஆக உயர்வு..

  மகாராஷ்டிராவில் பரிசோதனை உள்ளாக்கப்படுபவர்களில் 14 விழுக்காடு பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே பரிசீலித்து வருகிறார். பஞ்சாப் , கேரளா,  குஜராத், தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  கடந்த சிலவாரங்களாக தமிழகத்தின் தினசரி பாதிப்பு 400 முதல் 600க்குள் இருந்த நிலையில் நேற்று 600ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: