இதுவரை இல்லாதது... கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் மரணம்... 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இதுவரை இல்லாதது... கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் மரணம்... 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: April 6, 2020, 7:32 PM IST
  • Share this:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4067-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 111-ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 748 பேர் பாதிக்கப்பட்டதுடன் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45-ஆக உள்ளது. நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 20 பேர் உயிரிழந்தனர். இதற்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் 621 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.


டெல்லியில் 523 பேர், தெலங்கானாவில் 334 பேர், கேரளாவில் 327பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 291 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 704 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதுவரை இல்லாதது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading