HOME»NEWS»CORONAVIRUS-LATEST-NEWS»india quickly became a corona vaccinating country vai

விரைவாக தடுப்பூசி செலுத்தும் நாடாக மாறிய இந்தியா

உலகளவில் குறைந்த நாட்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது.

விரைவாக தடுப்பூசி செலுத்தும் நாடாக மாறிய இந்தியா
மாதிரி படம்
  • Share this:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த மாதம் 16ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. முதற்கட்டமாக சுகாதாரத்துறையினருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடுவதற்காக 92 லட்சத்து 61 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். அவர்களில் 43 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 நாட்களில் 45 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படதன் மூலம் உலகிலேயே விரைவாக தடுப்பூசி செலுத்திய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்த எண்ணிக்கையை எட்டுவதற்கு அமெரிக்கா 20 நாட்களையும், இஸ்ரேல் இங்கிலாந்து போன்ற நாடுகள் 39 நாட்களையும் எடுத்துக் கொண்டன. இந்தியாவை பொருத்தவரை மத்தியபிரதேசத்தில் அதிபட்சமாக 69.4 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க...Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை உயர்வு!



அதனை தொடர்ந்து ராஜஸ்தானில் 64.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏராளமான முன்களப்பணியாளர்கள் முன்பதிவு செய்திருந்தாலும் 22 புள்ளி 6 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடமுன்வந்துள்ளனர். மகாராஷ்டிரா, டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: