இந்தியா சமூகப் பரவல் நிலையை அடையவில்லை - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

இந்தியா சமூகப் பரவல் நிலையை அடையவில்லை - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
கோப்பு படம்
  • Share this:
இந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவல் என்ற நிலையை அடையவில்லை என்று சுகாதாரத்துறைச் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா தொற்று குறித்து சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் 649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

17 மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்கு பிரத்யேகமாக மருத்துவமனை கட்டும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விகிதம் நிலையாக உள்ளது. நாம் அரசின் உத்தரவைப் பின்பற்றவில்லையென்றால் கொரோனா தொற்று சமூகப் பரவல் நிலையை அடையும்.


ஆனால், நாம் அரசின் உத்தரவைப் பின்பற்றி சமூக இடைவெளியை சரியாக பின்பற்றினால் இந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவல் நிலையை அடையாது. இந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவல் நிலையை அடைந்துவிட்டது என்பதற்கு உறுதியான எந்த ஆதாரமும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Also see:
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்