மே மத்தியில் கொரோனாவின் உச்சகட்டம் இருக்கும் ஐஐடி விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்

மே மத்தியில் கொரோனாவின் உச்சகட்டம் இருக்கும் ஐஐடி விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்

கொரோனாவின் உச்சகட்டம்

இந்தியாவில் கொரோனா உச்சகட்டத்தை எட்டும் போது நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33 முதல் 35 லட்சமாக இருக்கும் எனவும் ஐஐடி விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

  • Share this:
இந்தியா தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மே மாத மத்தியில் உச்சகட்டத்தை எட்டும் என ஐஐடி விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,66,10,481ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 2,624 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 773 பேரும், டெல்லியில் 348 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அன்றாட பணிகளை சுருக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இதனிடையே ஐஐடி விஞ்ஞானிகள் கணிதத்தின் அடிப்படையில் (SUTRA) கொரோனாவின் உச்சகட்டம் குறித்தும் அப்போது பாதிப்பின் அளவு என்னவாக இருக்கும் என கணித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும் முன்னதாக மே மாத மத்தியில் அதாவது மே 11 முதல் 15ம் தேதிக்குள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் உச்சகட்டத்தை எட்டும் என தெரிவித்துள்ளனர்.

டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஏப்ரல் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை அடையும் எனவும் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் மாநிலங்களில் ஏற்கனவே உச்சகட்டத்தை எட்டிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் கொரோனா உச்சகட்டத்தை எட்டும் போது நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33 முதல் 35 லட்சமாக இருக்கும் எனவும் ஐஐடி விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதே நேரத்தில் மே மாத இறுதியிலேயே கொரோனா பாதிப்பு கடுமையாக சரியும் எனவும் ஐஐடி கான்பூரின் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எஞ்சினியரிங் பிரிவு பேராசிரியர் மகிந்திரா அகர்வால் குறிப்பிட்டார்.

 
Published by:Arun
First published: