• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கவனத்துக்கு வரவில்லையா உயிரிழப்புகள்? 2 மாத ஊரடங்கும் கொரோனா பாதிப்பும்

கவனத்துக்கு வரவில்லையா உயிரிழப்புகள்? 2 மாத ஊரடங்கும் கொரோனா பாதிப்பும்

கோப்புப்படம்

கோப்புப்படம்

இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்த 2 மாத காலத்தில், கொரோனா பாதிப்பு 600-ல் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 10வது இடத்தை இந்தியா எட்டியுள்ளது.  ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்ட நிலையிலும், நாள்தோறும் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. எனினும் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் மிகக்குறைவாகவே காணப்படுகிறது.

    உலகம் முழுவதும் நாள்தோறும் அதிக பாதிப்புகள் கண்டறியப்படும் நாடுகளின் பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது.  அதாவது அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக, நாள்தோறும் அதிக பாதிப்புகள் ஏற்படும் நாடாக இந்தியா மாறியுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் இந்தியாவில் 70 ஆயிரம் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    இந்தியாவில் உயிரிழப்பு குறைவாக உள்ள போதும், குணமடைவோர் விகிதம் அதிகரித்துள்ளது.  எனினும் நாள்தோறும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, குணமடைவோர் எண்ணிக்கையை விட அதிகமாகவே உள்ளது.

    பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மட்டுமே கணக்கிடப்படுகிறது. ஆனால், உண்மையில் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உறுதியான எண்ணிக்கை அறியப்படும் வரை, அதிகளவிலான உயிரிழப்புகள் அறியப்படாமலே போகும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    எனினும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நாடாக இந்தியா விளங்குகிறது.

    ஒரு நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில், எவ்வளவு பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பதை பொறுத்தே, ஒரு நாடு மேற்கொள்ளும் பரிசோதனைகள் கணிக்கப்படுகிறது. அவ்வாறு இந்தியாவின் மொத்த மக்கள் தொகையுடன் பரிசோதனை எண்ணிக்கையை ஒப்பிட்டால், இந்தியாவின் பரிசோதனை விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

    இந்தியாவில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்ட போது, பாதிப்புகள் கட்டுக்குள் இருந்ததாகவே கருதப்படுகிறது. குறிப்பாக 21 நாட்கள் கடைபிடிக்கப்பட்ட முதல் ஊரடங்கின் போது, தொற்றுகள் பெருமளவில் கட்டுக்குள் இருந்தது இதற்கு சாட்சியமாக அமைந்துள்ளது.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: