இந்தியாவில் அக்டோபருக்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள்.. மத்திய அரசு தகவல்..

கோப்புப் படம்

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. தற்போது, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன. அதேநேரத்தில், தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பல மாநிலங்கள் தெரிவித்து உள்ளன. இதனையடுத்து, தடுப்பு மருந்து உற்பத்தியை விரைவுபடுத்தும்படி மத்திய அரசு கேட்டு கொண்டு உள்ளது.

  இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்ரும் கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் வி; ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவன தடுப்பூசி, நோவோவேக்ஸ், ஸைடஸ் கெடிலா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக எடுத்துக் கொள்ளும் தடுப்பூசி ஆகியவை அக்டோபருக்குள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இன்னும் 10 நாட்களில் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

  மேலும் படிக்க... கொரோனாவை தடுக்க தெருவில் இறங்கி மாஸ்க் கொடுக்கும் பிக்பாஸ் ஆரி

  ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றில் எதையும் நிறுத்தாமல் மருந்து தயாரிக்கும் பணியை விரைவுபடுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: