முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனா ஒருநாள் பாதிப்பில் மீண்டும் உலக அளவில் இந்தியா முதலிடம்... 24 மணி நேரத்தில் 93,000 பேருக்கு தொற்று....

கொரோனா ஒருநாள் பாதிப்பில் மீண்டும் உலக அளவில் இந்தியா முதலிடம்... 24 மணி நேரத்தில் 93,000 பேருக்கு தொற்று....

  கொரோனா சோதனை

கொரோனா சோதனை

உலகிலேயே இந்தாண்டின் கொரோனா தொற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரு நாள் பாதிப்பில் அதிகபட்சமாக இந்தியாவில் 93,000 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 93,249 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 513 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பதிவாகும் உச்சபட்ச கொரோனா பாதிப்பு இதுவாகும். நாட்டின் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,447 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஊரடங்கை அமல்படுத்த மகாராஷ்டிரா அரசு தீவீர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது.

புனேவில் வழிபாட்டுத்தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளார். குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை செலுத்திக்கொண்டார்.

மேலும் படிக்க... Petrol-Diesel Price | 5 நாட்களாக தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை...

ஒடிசாவில் கொரோனா பரவலை அடுத்து 10 நகரங்களில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலால் வரும் 7ம் தேதி முதல் கர்நாடகத்தில் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது. சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் வரும் 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் உத்தரபிரதேசத்தில் பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 24 மணி நேரத்தில் புதிதாக 3,446 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,96,226-ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 12,764-ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட அளவில் சென்னையில் அதிகபட்சமாக 1,290 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 292 பேருக்கும், செங்கல்பட்டில் 285 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில், 81467 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இதில் 1,834 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: CoronaVirus