கொரோனா தடுப்பூசிகளை வேகமாக செலுத்தி வரும் இந்தியா!

கொரோனா

இந்தியாவில் மூன்றாவது அலை இப்போதிலிருந்து 6-8 வாரங்களுக்குள் தொடங்கக்கூடும் என்று சிலர் கணித்துள்ளனர்.

  • Share this:
    ஜூன் 28 வரை இந்தியாவில்  32,36,63,297 எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. அதாவது அமெரிக்கா செலுத்தியுள்ள தடுப்பூசியை விட அதிக அளவிலான தடுப்பூசியை இந்தியா செலுத்தியுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி இந்த ஆண்டு ஜனவரி 16 தேதி தான் தொடங்கியது, அதே நேரத்தில் அமெரிக்கா, கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிவிட்டது. குறிப்பாக நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா இரண்டாவது அலையின் பேரழிவில் நமது சுகாதார உட்கட்டமைப்பில் ஏற்படுத்திருக்கும் தாக்கத்தில் இது சராசரி சாதனை அல்ல. இருப்பினும், தகுதிவாய்ந்த மொத்த மக்கள்தொகைக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டவர்களின் சதவீதம் குறைவாகவே உள்ளது.

    இந்தியாவில் மூன்றாவது அலை குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவின் மூன்றாவது அலை இப்போதிலிருந்து 6-8 வாரங்களுக்குள் தொடங்கக்கூடும் என்று சிலர் கணித்துள்ளனர், மற்றவர்கள் செப்டம்பர்-அக்டோபரில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.மூன்றாவது அலையின் நேரமும் அளவும் வைரஸ் பிறழ்வு மற்றும் பரவும் வேகம், மனித நடமாட்டம் மற்றும் தடுப்பூசி அளவைப் பொறுத்து இருக்கலாம் என கருதி காலத்தை வீணடிக்காமல் மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பு இருப்பதை கருதி இப்போதில் இருந்தே அரசாங்கமும் நாட்டு குடிமக்களும் சிவில் சமூக அமைப்புகளும் மற்றும் தொழில் நிறுவனங்களும் இப்போதில் இருந்து அதற்கு தயாராக இருக்கவேண்டும்

    எதிர் வரும் காலங்களில் உலகம் இது போன்று வரும் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் அதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் COVID-19 தடுப்பூசிகளுடன், நோய்த்தொற்று மற்றும் பரவுதலின் தாக்கம், இருப்பிடம் மற்றும் வைரஸ் மாறுபாட்டால் வேறுபட கூடும் என்றாலும், தடுப்பூசிகள் உயிர்களைக் காப்பாற்றுகின்றன. யாரோ ஒருவர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் கூட, தடுப்பூசி போடப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைந்த அளவே  இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதை விட ஏதோ ஒரு பாதுகாப்புடன் இருப்பது சிறந்தது. உண்மையில், பல சந்தர்ப்பங்களில் வாழ்வுக்கும் இறப்புக்கும் உள்ள வித்தியாசம் காட்டுகிறது.

    இந்தியாவைப் பொறுத்தவரை, பிரச்னை என்னவென்றால் குறைந்த தடுப்பூசி விகிதம் மற்றும் வைரஸின் மறு தோற்றமான டெல்டா இவைகள் சற்று கவலை அளிக்கக்கூடியது. அதோடு 0-18 வயதுக்கு இடைப்பட்ட வயதினருக்கு தடுப்பூசி போடத் தொடங்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தடுப்பூசி வேகமாக செலுத்தாமல் நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அடைய வாய்ப்பில்லை. குறிப்பாக தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் இந்த வேகத்தை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். அரசாங்கத்தால் இலவசமாக தடுப்பூசி போடுவது என்பது தொலைதூர கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற சேரி சமூகங்களில் உள்ளவர்களுக்கு இன்னும் ஒரு சவாலாகவே உள்ளது. தொழில்நுட்ப வசதி  இல்லாமை, தடுப்பூசி மீது இருக்கும் தயக்கம் மற்றும் குறைந்த அளவிலான விழிப்புணர்வு ஆகியவை சமாளிக்க வேண்டிய சவால்களாக உள்ளன.

    தடுப்பூசிகளின் செயல்திறன் காலத்தை நிர்ணயிக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கையில், எதிர்காலத்தில் இது போன்று வரும் அலைகளை கருத்தில் கொண்டு விரைவான மற்றும் பயனுள்ள நோய்த்தடுப்பு இயக்கிகளுக்கு ஏற்றவாறு பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.இத்தகைய உள்கட்டமைப்பு மற்றும் செயல்முறைகள் எதிர்காலத்தில் பெரும் துணை செய்யும் அளவுகளுக்கு விரைவான மற்றும் திறமையான பாதுகாப்புக்கு உதவும், அவை வெவ்வேறு நேர இடைவெளியில் தேவைப்படலாம்.

    இந்த போராட்டத்தில் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த சமுதாயத்தில் நேரடியாக செயல்படும் முன்கள சுகாதார ஊழியர்களின் திறனை ஊக்குவிப்பதாகும். கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் அங்கன்வாடி தொழிலாளர்கள், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் துணை செவிலியர்கள் மருத்துவ (ANM) தொழிலாளர்கள் இவர்கள் அனைவரும் வெல்லமுடியாத ஹீரோக்கள்.தடுப்பூசிகளுக்காக மக்களை கீழிருந்து மக்களை தயார்படுத்தி, கற்பித்து அவர்களை சமாதானப்படுத்தி, அணிதிரட்டுகின்றனர் அதோடு அவ்ரகளுக்கான விரிவான பாதுகாப்பு முதலியவற்றை அவர்கள் உறுதி செய்கிறார்கள். அவற்றின் திறன் கட்டமைக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியமானது, மேலும் மக்களை அணிதிரட்டுவதற்கு தேவையான அறிவு அவர்களுக்கு உள்ளது.

    தடுப்பூசிகள் தான் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான ஒரே வழி. அனைவருக்கும் தடுப்பூசி போடும் வரை யாரும் பாதுகாப்பாக இல்லை. நாம் அனைவரும் தடுப்பூசி போட்டு, நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டிய நேரம் இது.

     

    அனில் பர்மார், துணைத் தலைவர்,
    சமூக முதலீடு, யுனைடெட் வே மும்பை

     

     
    Published by:Tamilmalar Natarajan
    First published: