ராஜஸ்தானில் கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழப்பு...!

ராஜஸ்தானில் கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழப்பு...!
கோப்புப்படம்
  • Share this:
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை இந்தியாவில்  694 பாதிக்கப்பட்டு அதில் 44 பேர் குணமாகியுள்ளனர். தற்போது சிகிச்சையில் இருப்போர் 633 பேர். பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் 44 பேர். இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 88 பாதிப்படைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்றிரவு ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் கொரோனாவால் மரணமடைந்தவருக்கு ஏற்கனவே சிறுநீரக உபாதையும், ரத்தம் தொடர்பான நோய் இருந்து வந்ததாக மஹாத்மா காந்தி மருத்துவமனையில், தற்போது தலைமைப் பதவி வகிக்கும் ராஜன் நந்தா தெரிவித்திருக்கிறார்.


பில்வாராவில் மொத்தம் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 15 பேர் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading