Coronavirus | முதல் முறையாக ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று; 478 பேர் பலி- உலக அளவில் முதலிடம்

Coronavirus | முதல் முறையாக ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று; 478 பேர் பலி- உலக அளவில் முதலிடம்

கொரோனா

நாட்டில் முதன்முறையாக அன்றாட கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

  • Share this:
    நாட்டில் முதன்முறையாக அன்றாட கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

    சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் தமிழகத்தில் அன்றாட பாதிப்பு 3500 என்ற அளவை எட்டியிருக்கிறது.

    இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து நாட்டில் முதன்முறையாக அன்றாட தொற்று எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 1,03,558 பேருக்கு புதிதாகக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,25,89,067 என்றளவில் உள்ளது.

    அதேபோல் ஒரே நாளில் 478 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.

    தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று அதிகமாகப் பதிவாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 29 லட்சம் பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 57,074 பேருக்கு தொற்று உறுதியானது. மும்பையில் மட்டும் 11,163 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. மும்பை நகரில் இதுவரை 4,52,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை மொத்தம் 7 கோடியே 91,05,163 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் ஏப்ரல் 2ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    டெல்லியில் 4,000 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கோவிட் எண்ணிக்கை 6,76,114 ஆக உள்ளது. இந்த ஆண்டில் இதுதான் ஒரே நாளில் பதிவான அதிகமான தொற்று எண்ணிக்கையாகும்.

    சத்திஸ்கர் (5,250), கர்நாடகா (4,553), உ.பி (4136), ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே நாளில் அதிக தொற்று ஏற்பட்டுள்ளது.

    இதற்கு முன்பாக ஒரே நாளில் ஒரு லட்சம் தொற்று ஏற்பட்டதில்லை. கடைசியாக செப்டம்பர் 17ம் தேதி ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இப்போது முதல் முறையாக 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்தைக் கடந்தது.

    நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கொரோனா நடத்தை விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்ட காரணத்தால் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளதாக பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா பரவலுக்கான மூன்று முக்கிய காரணங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அவற்றில் முதலாவது முகக்கவசத்தை முறையாக அணியாததாகும்., தனிமனித இடைவெளி போன்ற பழக்கவழக்கங்களை மக்கள் முறையாக பின்பற்றாதது மூல காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தொற்று பரவும் பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பதில் மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள சுணக்கமும் நோய் பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
    Published by:Muthukumar
    First published: