ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸுக்கு அளிக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா சிகிச்சைக்கு முக்கிய பங்கு வகிக்கும் ரெம்டெசிவர் ஊசி மருந்து சில இடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் ஊசி மருந்து விற்பனை அதிகரித்துள்ளது. புனேவில் ரெம்டெசிவர் ஊசி மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இதனை கருத்தில் கொண்டும், அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டும் ரெம்டெசிவர் ஊசி மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
ரெம்டெசிவர் மருந்தை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் தங்களது விநியோகஸ்தர்கள், ஸ்டாக்கிஸ்டுகளின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், மருந்து ஆய்வாளர்கள் அதனை சரிபார்த்து பதுக்கல் மற்றும் கருப்புச் சந்தைப்படுத்தலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.