ஏப்ரல்14-ஆம் தேதிக்கு பிறகு நாகையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று : காரணம் என்ன?

நாகை மாவட்டத்தில் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு கொரோனா  தொற்று அதிகரித்து வருகிறது. 

ஏப்ரல்14-ஆம் தேதிக்கு பிறகு நாகையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று : காரணம் என்ன?
கோப்பு படம்
  • Share this:
நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 51 நபர்கள் நாகை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 51 நபர்களும் கடந்த மாதம் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் தொற்று இல்லாத மாவட்டமாக நாகை மாறியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதனை தொடர்ந்து சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருபவர்கள் கொரோனா தொற்று பாதிப்பாடு மாவட்டத்திற்குள் நுழைவதால் நாகை மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு நாகை மாவட்டத்தில் வசித்து வந்த ஒருவருக்கு கூட தொற்று இல்லாத நிலையில், வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் வேலை பார்த்து நாகை திரும்பிய நபர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் சுமார் 11 மாநில மாவட்ட சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டாலும் அவர்களின் கண்ணில் மண்ணை தூவி மாவட்டத்தின் உள்ளே குறுக்கு வழியில் பலர் நுழைகின்றதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.


நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்


நாகை மாவட்டம் முழுவதும் 64 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நாகை வந்த 4 நபர்களுக்கும், திருச்சியில் வேலை பார்த்து நாகை திரும்பிய ஒருவருக்கும், மும்பை, தெலுங்கானா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் வேலை பார்த்து நாகை திரும்பிய மூவர் என நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு  நாகையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் தப்லீக் ஜமாத் சென்று திரும்பியவர்கள், தொற்று ஏற்பட்ட தனியார் கிளினிக் மருத்துவர் குமரப்பனிடம் சிகிச்சை பார்த்தவர்கள் என அனைவரும் குணமடைந்து சமூக பரவல் தடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு வெளி மாவட்டம், மற்றும் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று நாகை திரும்பியவர்களுக்கே தொற்று ஏற்பட்டுள்ளது.வெளியூரில் இருந்த வருபவர்கள் சோதனை சாவடியில் போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக சோதனை செய்யப்படுகின்றனர். இருந்தபோதிலும் வெளியூரில் இருந்து நாகை வருபவர்களை மாவட்டத்தின் உள்ளே அனுமதிக்காமல் எல்லையிலயே அவர்களை தனிமை படுத்த வேண்டும் என்றும், அப்பொழுதுதான் அவர்கள் மூலமாக நாகையில் உள்ள பொதுமக்களுக்கு தொற்று பரவாமல் இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

நாகை மற்றும் மயிலாடுதுறை மருத்துவமனைகளில் 21 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நாகை மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 72 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க...

குறிப்பிட்ட சில மாநிலங்களில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஷாக் தகவல்கள்  








First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading