100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்த அரசு!

இதன் மூலம் மாதம் ஊழியர் ஒருவருக்கு 2ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறும்.

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்த அரசு!
மாதிரிப்படம்
  • Share this:
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மக்கள் யாரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடாது என மத்திய அரசு இன்று சிறப்புப் பொருளாதார திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கான ஊதியத் தொகஒ 182 ரூபாயிலிருந்து 202 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


இதன் மூலம் மாதம் ஊழியர் ஒருவருக்கு 2ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 5 கோடி பணியாளர்கள் பயனடைய உள்ளனர்.

கூடுதலாக விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாயிகள் நலத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் முதல் வாரத்தில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்குகளில் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 8.69 கோடி விவசாயிகள் பயனடைய உள்ளனர்.

மேலும் பார்க்க: ஏழை மக்களுக்கு உதவ ₹1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு..! - நிர்மலா சீதாராமன்சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்