ஹோம் /நியூஸ் /கொரோனா /

Covid Death : எந்த இணை நோயும் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் மரணம் தமிழகத்தில் அதிகரிப்பு... காரணம் என்ன?

Covid Death : எந்த இணை நோயும் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் மரணம் தமிழகத்தில் அதிகரிப்பு... காரணம் என்ன?

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

தமிழகத்தில் எந்த இணை நோயும் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் மரணம் அடைவது அதிகரித்துள்ளது. இதற்கு என்ன தான் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளது. இரண்டாம் அலை பாதிப்பில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதிக வீரியம் கொண்டுள்ளதால் வேகமாக பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய பாதிப்பு உள்ளிட்ட இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.

ஆனால், தமிழகத்தில் இணை நோய் இல்லாதவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணிப்பது அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் இணை நோய் இல்லாத 128 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 125 பேர் மரணம் அடைந்தனர்.

இணை நோய் இல்லாதவர்கள் அதிகளவில் மரணம் அடைய 3 காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உரிய நேரத்தில் சிகிச்சை பெறாதது, மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாதது மற்றும் தகுந்த சமயத்தில் மருந்துகள் கிடைக்காதது என, காரணிகளை வரிசைபடுத்துகின்றனர்.

கொரோனா முதல் அலை பாதிப்பின் போது ஏராளமானோர் வீட்டில் இருந்தே பணியாற்றியதாகவும், ஆனால் இரண்டாம் அலை பாதிப்பின் போது பலர் அலுவலகங்களுக்கு செல்ல தொடங்கி விட்டதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இது நோய் தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்றும் தெரிவிக்கின்றனர்.

Must Read : சமூக வலைதளங்களில் வைரல் ஆன நாதஸ்வரக் கலைஞர் நியூஸ் 18 தொலைக்காட்சி உதவியுடன் கண்டுபிடிப்பு

சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக குறிப்பிடும் மருத்துவர்கள், பிற மாவட்டங்களில் இன்னும் 2 வாரங்களுக்கு நோய் தொற்று அதிகரித்து அதன்பின் குறையும் என தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Corona death, CoronaVirus, Covid-19