திருச்சியில் தொலைதூரப் பேருந்துகளில் ஆட்கள் குறைவு... மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணம்

வெளியூர் செல்லூம் பேருந்து

இன்று திருச்சி ஆம்னி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. சென்னை செல்லும் அரசுப் பேருந்துகளிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.

  • Share this:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு இன்று நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் மொத்தம் 3, 184 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இதில் இரவில் இயக்கப்படும் 25% பேருந்துகள் அதாவது 796 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பகலில் பயணிகள் கூட்டம் அதிக வருகை, தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று திருச்சி ஆம்னி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. சென்னை செல்லும் அரசுப் பேருந்துகளிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. சென்னைக்கு கடைசி பேருந்து பிற்பகல் 3 மணி ஆகும். விழுப்புரத்திற்கு 6.30 மணி, சேலம் - 5.30, நாமக்கல் - 8.00 கோவை - 5.00, திருப்பூர் - 6.00, கரூர் - 7.30, பழனி - 6.30, மதுரை - 7.00, கும்பகோணம் - 7.00 மணி, தஞ்சாவூர் - 8.30, புதுக்கோட்டை - 8.30, பெரம்பலூர் - 8.30 இப்படி திருச்சியில் இருந்து சென்னைக்கு ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் கடந்த ஓராண்டாக தொடரும் கொரோனா அச்சுறுத்தலால் 50க்கும் குறைவான பேருந்துகளாக சுருங்கியது.

வார இறுதி நாட்கள், திருவிழா காலங்களில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருச்சி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தொலை தூர பயணங்ளுக்கு பகலில் மட்டும் பேருந்து சேவை என்பது நடைமுறை சாத்தியம் இல்லை.

பெரும்பான்மையானவர்கள் இரவில் மட்டுமே பயணிப்பார்கள். மேலும், கொரொனாவால் கடந்த ஓராண்டு காலமாக பயணிகள் வரத்து குறைவால், வருவாய் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திருச்சி ஆம்னி பேருந்து உரிமையாளர் சக்கரை கூறுகிறார்.

மேலும் படிக்க... படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சரஸ்வதி குடும்பத்தினரை சந்தித்து திமுகவினர் ஆறுதல் - தம்பி, தங்கை படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதி

இது ஒருபுறமிருக்க, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பேருந்துகளில் இருக்கையில் அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும். நின்று கொண்டு பயணிக்க அனுமதியில்லை என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநகரப் பேருந்துகள் சிலவற்றில் அரசு கட்டுப்பாட்டை மீறி நின்று கொண்டு பயணிகள் சென்றனர்.

குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் செல்லும் வழித்தடம் மற்றும் ஓரிரு பேருந்துகள் மட்டுமே செல்லும் கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்காமல், கட்டுப்பாடு விதிப்பதால் பயனில்லை. நடைமுறைக்கு சாத்தியமும் இல்லை என்று பயணிகளும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: