20% மக்கள் தங்கள் மோவாய்க்கு முகக்கவசம் அணிகின்றனர், 50% மக்கள் முகக்கவசம் அணிவதில்லை

மாதிரி படம்

இந்தியாவில் 50% மக்கள் முகக்கவசமே அணிவதில்லை எனவும், 14% பேர் மட்டுமே முறையாக முகக்கவசம் அணிவதாகவும் ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டி, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    இது தொடர்பாக மத்திய சுகாதார இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்காத சூழலில், ஒரே மாதத்தில் அவரால் 406 நபர்களுக்குத் தொற்றை ஏற்படுத்த முடியும்.

    அதேபோல முகக்கவசம் அணிவதும் முக்கியம். கொரோனா தொற்று ஏற்பட்ட ஒரு நபரும் தொற்றால் பாதிக்கப்படாத நபரும் முகக்கவசம் அணியாத சூழலில், தொற்றுப் பரவ 90 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இரண்டு நபர்களும் முறையாக முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் சூழலில், தொற்று அபாயம் கிட்டத்தட்ட இல்லை.

    இந்தியாவில் 25 நகரங்களில் 2 ஆயிரம் மக்களிடம் முகக்கவசம் அணிவது குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளின்படி, நாட்டில் 50% மக்கள் முகக்கவசமே அணிவதில்லை. மீதமுள்ள 50 சதவீத மக்களில், 64 சதவீத மக்கள் வாய் மட்டுமே மூடும் வகையில் முகக்கவசம் அணிகின்றனர். 20 சதவீத மக்கள் மோவாய்க்கு முகக்கவசம் அணிகின்றனர். 2 சதவீத மக்கள் கழுத்துக்கு முகக்கவசம் அணிகின்றனர். மீதமுள்ள 14% பேர் மட்டுமே முறையாக முகக்கவசம் அணிந்து செல்கின்றனர்.

    நாடு முழுவதும் 8 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான தொற்று பாதித்தவர்கல் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் குறைவான நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்’’.

    இவ்வாறு சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

    காற்றோட்டம்:

    கொரோனா பரவலை குறைப்பதில் காற்றோட்டத்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் வெளியிட்டுள்ள ஆலோசனை குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நல்ல காற்றோட்டம், பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் அபாயத்தை குறைக்கும். ஜன்னல்கள், கதவுகளை திறந்து வைத்திருப்பதின் மூலமும், காற்று வெளியேற்ற அமைப்புகளை பயன்படுத்துவதின் மூலமும் எந்தவொரு வாசனையையும் காற்றில் இருந்து நீர்த்துப்போகச்செய்ய முடியும். இதே போன்று, காற்றோட்டமான இடங்கள், நல்ல காற்றோட்டம், காற்றில் உள்ள வைரசை குறைக்கிறது. பரவும் அபாயத்தையும் குறைக்கிறது.

    அறிகுறியில்லாத கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களாலும் தொற்று பரவும். எனவே முக கவசம் அணிவது குறிப்பாக இரட்டை முக கவசம் அணிவது அல்லது என் 95 முக கவசம் அணிவதைத் தொடர வேண்டும்.
    Published by:Muthukumar
    First published: