நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி முன்வைத்த 7 முக்கிய கோரிக்கைகள்...!

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி முன்வைத்த 7 முக்கிய கோரிக்கைகள்...!

பிரதமர் நரேந்திர மோடி

"இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது."

 • News18
 • Last Updated :
 • Share this:
  நாட்டு மக்களுக்கு இன்று காலை உரையாற்றிய பிரதமர் மோடி, முக்கிய 7 கோரிக்கைகளை மக்களிடையே முன்வைத்தார்.

  உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரசால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார்.

  தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

  இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஊரடங்கை மே3 வரை நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும், மக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய 7 கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.

  1. உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களை, குறிப்பாக உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்களைச் சரியாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

  2. வெளியே வரும் போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும். முகக் கவசங்களை வீட்டிலேயே கூடத் தயாரித்து அணிந்து கொள்ளலாம்.

  3. ஆயுஷ் அமைச்சகம் வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.

  4. 'Aarogya Setu' செயலியைப் பதிவிறக்கம் செய்து கொரோனா பரவல் குறித்துத் தெரிந்து கொண்டு பரவலைக் குறைக்க வேண்டும்.

  5. முடிந்தவரை ஏழைக் குடும்பங்களுக்கு உதவுங்கள்.

  6. உங்கள் தொழிலில், உங்கள் சக ஊழியர்களுக்கு உதவுங்கள். ஆட்குறைப்பு செய்யாதீர்கள்

  7. கொரோனா வைரசை எதிர்த்து நிற்கும் வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும்.

  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: