அரியலூரில் ஒவ்வொரு குடும்பமும் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே காய்கறி வாங்க அனுமதி...!

அரியலூரில் ஒவ்வொரு குடும்பமும் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே காய்கறி வாங்க அனுமதி...!
(கோப்புப்படம்)
  • Share this:
அரியலூர் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மக்கள் அன்றாடம் வெளியே வருவதைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஊதா, ரோஸ், பச்சை நிறங்களில் அட்டை வழங்கப்படுகிறது. ஊதா நிற அட்டை வைத்திருப்போர் செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் ரோஸ் நிற அட்டை வைத்திருப்போர் திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் பச்சை நிற அட்டை வைத்திருப்போர் புதன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே கடைகளுக்கு செல்லவேண்டும்.

காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணிக்குள், வீட்டிற்கு ஒருவர் சென்று பொருள் வாங்கலாம். 18 வயது முதல் 60 வரையுள்ளவர்கள் மட்டுமே வெளியே வரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Also see...
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading