அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் சிறைக்கைதி...!

அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் சிறைக்கைதி...!
கோப்புப் படம்
  • Share this:
அமெரிக்காவில் சிறைக்கைதிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனா, இத்தாலி, இரான் போன்றவற்றைத் தொடர்ந்து வரும் நாடுகளில் அமெரிக்காவும் அடங்கும். அங்கும் பிற நாடுகளைப் போலவே கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா சிறைக் கைதிகளையும் விட்டுவைக்கவில்லை. நியூயார்க்கில் உள்ள சிறை ஒன்றில் மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய கைதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


அமெரிக்க சிறையில் முதன்முதலாக கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also see:
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்