Immunity | கொரோனாவுக்கு எதிரான புதிய நம்பிக்கை: மீண்டவர்கள், தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு நீண்ட கால பாதுகாப்பு- ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் உருமாறி, உருமாறி புதுப்புது வகையினங்களாக பரிணாமம் அடைந்து வரும் நிலையில் வாக்சின் மட்டுமே தீர்வு என்றாகியுள்ளது, இதனையடுத்து தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களுக்கும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு நீண்ட காலம் இருக்கும்  என்றும்,  சிலருக்கு ஆயுள் முழுதுமே வைரஸிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற ஆய்வுகள் நம்பிக்கையளித்துள்ளன.

  • Share this:
    இரண்டு முக்கிய ஆய்வுகள் தெரிவிப்பது என்னவெனில் சார்ஸ்-2 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கோவிட்-19-க்கு எதிராக தடுப்பூசிப்போட்டுக் கொண்டவர்கள் ஆகியோரில் பலருக்கு ஆயுள் முழுதுமே கொரோனா வைரசிலிருந்து பாதுகாப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறது இந்த ஆய்வு. அதாவது மீண்டும் தொற்றாது என்று அர்த்தமல்ல, ஆனால் கோவிட்-19-ஐ எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளை போதிய அளவில் உற்பத்தி செய்யும் என்கிறது இந்த ஆய்வு.

    இந்த புதிய ஆய்வு பற்றிய குறிப்புகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளன. வாக்சின் போட்டும் கொரோனா தொற்றுதல், ஏற்கெனவே வந்தவர்களுக்கும் மாதங்கள் சென்ற பிறகு மீண்டும் தொற்றுப் பீடித்தல் போன்ற சாத்தியங்கள் விஞ்ஞானிகளை கவலையடையச் செய்தது. அதாவது கொரோனா வைரஸுக்கு எதிரான உடற்காப்புச் சக்திகள் கொஞ்ச நாளைக்குத்தானா என்று அவர்கள் கவலையடைந்தனர்.

    மேலும் ஓராண்டுக்கு ஒருமுறை அல்லத் 6 மாதங்களுக்கு ஒருமுறை வாக்சின் போட்டுக் கொள்ள வேண்டிய தேவையை உருவாக்குமோ என்ற கவலையும் இருந்தது.

    இந்நிலையில் இந்த ஆய்வில் சார்ஸ்-2, கோவிட் 19 வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி, ஆண்ட்டிபாடி பலருக்கு பல ஆண்டுகளுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று கண்டுப்பிடித்துள்ளனர்.

    இதற்குக் காரணம், எலும்பு மஜ்ஜையில் ஆண்ட்டிபாடி உற்பத்தி என்ற காரணியை இவர்கள் கொண்டு வருகின்றனர். இரண்டு ஆய்வுகளில் எலும்பு மஜ்ஜையில் நோய் எதிர்ப்பு செல்களின் இருப்பு பற்றி கண்டறிந்துள்ளனர்.

    எலும்பு மஜ்ஜையில் இருக்கும் இந்த செல்கள் தேவைப்படும்போது உடலில் ஆண்ட்டிபாடிகளை உருவாக்கும் என்கிறது இந்த ஆய்வு. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களிடத்தில் ரத்தத்தில் ஆண்ட்டிபாடி அளவு சில மாதங்களில் குறையும் என்று விஞ்ஞானம் கூறி வந்த நிலையில் இந்த ஆய்வு 11 மாதங்கள் வரை ஆண்டிபாடிகள் உடலில் இருக்கும் என்கிறது.

    தொடர்ந்து உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்திகள் டி-செல்களை உற்பத்தி செய்யக்கூடிய திறனுடன் இருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. இந்த டி-செல்கள் முன்பு வந்த கொரோனா வைரசை நினைவில் கொண்டு தடுக்கும். எலும்பு மஜ்ஜை ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்யும் என்பதால் பலதரப்பட்ட உருமாறும் வைரஸ்களையும் தடுக்கும் என்கிறார்கள்.

    கொரோனா பாதித்து மீண்டவர்களுக்கு இது நன்றாக வேலை செய்கிறது என்கிறது இந்த ஆய்வு.
    Published by:Muthukumar
    First published: