• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஸ்னாக்ஸ்

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஸ்னாக்ஸ்

பிள்ளைளுக்கு எதிர்ப்பு சக்தி ஸ்நாக்ஸ்

பிள்ளைளுக்கு எதிர்ப்பு சக்தி ஸ்நாக்ஸ்

புதுச்சேரியில் கொய்யா பழம் சாகுபடி செய்யும் பெண் விவசாயி ஒருவர் கொரோனா காலத்திற்கு ஏற்ப எதிர்ப்பு சக்தி மிகுந்த ஸ்நாக்ஸ் வகைகளை குழந்தைகளுக்காக செய்து அசத்தி வருகிறார்.

  • Share this:
புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி வேங்கடபதி. பத்மஸ்ரீ விருது வென்றுள்ள இவரது மகள் ஸ்ரீலட்சுமியும் விவசாயத்தில் நாட்டம் கொண்டு கொய்யாவில் அதிக மகசூல் கிடைக்க கூடிய பல ரகங்களை உற்பத்தி செய்து வருகிறார். நல்ல லாபம் தரும் கொய்யாவை பயிரிட விவசாயிகளுக்கு ஆலோசனையும் குறைந்த விலையில் கொய்யா கன்றுகளையும் விற்று வருகிறார்.

கொரோனாவால் வீடுகளுக்குள் முடங்கிய பிள்ளைகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க கொய்யாவில் சில ஸ்நாக்ஸ்களை தயாரித்துள்ளார். கொய்யா பொறியல், வழக்கமான உருளைகிழங்கு பொறியலை போல் கொய்யாவை விதை நீக்கி சிறிய துண்டுகளை நொருக்கி சமைக்க வேண்டும் என்கிறார்.

பஜ்ஜிக்கு உருளைகிழங்கை சீவுவது போல் கொய்யாவை மெலிதாக வட்ட வடிவில் நறுக்கி மாவில் நனைத்து எண்ணையில் போட்டு எடுத்தால் ருசியான கொய்யா பஜ்ஜி ரெடி என்கிறார் ஸ்ரீலட்சுமி.

இதுபோல கொய்யாவில் பலவிதமான ஸ்நாக்ஸ்-களை செய்து அசத்துகிறார். மேலும் கொய்யா பழம் குழந்தைகளுக்கு உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் என்றார்.

மேலும் படிக்க...

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு - அவசரச் சட்டம் வருகிறதா

 






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: