Home /News /coronavirus-latest-news /

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கக் கோரி மனித உரிமை ஆணையத்தில் புகார்

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கக் கோரி மனித உரிமை ஆணையத்தில் புகார்

புலம்பெயர் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பக் கூடாது என்பதற்காக ஒரு மாத சம்பளம் தரவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூரில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பி வைக்க கோரி மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தின் காட்டுப்பள்ளி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள எல் & டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் ஒப்பந்த கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஒரு மாத சம்பளமும் தராமல், இது வரை வழங்கப்பட்டு வந்த உணவு, கேஸ் வசதி மறுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் சொந்த ஊர் திரும்ப கூடாது என்பதற்காக நிர்வாகம் இப்படி செயவ்தாக தொழிலலர்களும் தொழிற்சங்கமும் குற்றம் சாட்டியுள்ளனர்.

பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா , ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 5 ஆயிரம் புல்ம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஊரடங்கு காலத்திலும் தொழிற்சாலையில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. சுழற்சி முறையில் தொழிலாளர்கள் அந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது வரை அவர்களுக்கான உணவை நிர்வாகம் அளித்து வந்தது. அதன் பிறகு வெளி மாநில தொழிலாளர்கள் ஊர் திரும்பலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டத்தை அடுத்து வீடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர்கள். அவர்களுக்கு சம்பளம் கொடுத்து விட்டால் ஊர் திரும்பி விடுவார்கள் என்பதால் சம்பளம் தராமல் இழுத்தடிக்கிறது நிர்வாகம் என குற்றம் சாட்டுகின்றனர். அப்போதிலிருந்து அவர்களுக்கு உணவும் நிறுத்தப்பட்டது.

"நாங்கள் ஊருக்கு செல்லக் கூடாது என்பதற்காக எங்களுக்கு சம்பளம் தரவில்லை. ஏற்கெனவே ஊரடங்கு காலத்தில் உணவு கிடைப்பது சவாலாக உள்ளது. கையில் பணமும் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவது முடியாத காரியமாக உள்ளது. ஊருக்கு செல்லலாம் என்றால் அதற்கும் வழியில்லை. என்ன செய்வதென்றே புரியாமல் தவிக்கிறோம்" என்கிறார் அங்கு பணிபுரியும் பீகாரை சேர்ந்த தீபக்.

சம்பளம் தராததால் கடந்த இரண்டு நாட்களாக பணி செய்ய மறுத்து வரும் அவர்களை ஜெயிலில் அடைத்து விடுவோம் எனவும் நிர்வாகம் குற்றம் சாட்டுவதாகவும் புகார் கூறுகின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையத்தில் இது குறித்து இந்திய தொழிற்ழங்க மையம் ( சி ஐ டி யு) மனு அளித்துள்ளது. சி ஐ டி யு வின் மீஞ்சூர் பகுதி செயலாளர் விஜயன்
கூறுகையில், " ஒரு மாத சம்பள பாக்கியை உடனடியாக தர வேண்டும். பணி செய்யும் காலத்தில் தொழிற்சாலைக்கு அருகில்
நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட தகரத்தால் ஆன கூரைக்கு கீழ் தான் தங்கி வருகின்றனர்.

வேலை செய்ய மறுத்ததால் வழக்கமாக அவர்களுக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வந்த உணவு மற்றும் கேஸ் வசதி மறுக்கப்பட்டு வருகிறது.

எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் உணவையும் வழங்க வேண்டும். இது குறித்து பொன்னேரி வட்டாட்சியரை தொடர்பு கொண்ட போது அவர்களுக்கான உணவு வழங்க முடியும் என்று கூறினார். ஆனால் அரசு தலையிட்டு சம்பள பாக்கியயும் பெற்று தர வேண்டும்" என்றார்.

இது குறித்து எல் & டி நிறுவனத்தின் சார்பாக நம்மிடம் பேசிய கோவிந்தராஜன், "நிர்வாகத்தின் அனுமதி பெற்று தொழிற்சாலையில் பராமரிப்பு பணிக்காக ஒப்பந்ததாரரை அழைத்தோம். ஆனால் தொழிலாளர்கள் பணி செய்ய மறுப்பதாக ஒப்பந்ததாரர் கூறினார்.

எங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. வழக்கமாக ஒப்பந்ததாரர் ரசீதுகள் சமர்ப்பித்த பிறகு 10ம் தேதி சம்பளம் தரப்படும். ஆனால் இந்த மாதம் ஒப்பந்ததாரர்கள் ரசீதுகள் சமர்ப்பிக்கவில்லை" என்றார். இந்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் சிலர் நடந்தே ஊர் திரும்பலாம் எனவும் புறப்பட்டு விட்டனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lockdown

அடுத்த செய்தி