CoronaVirus : இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.கே.அகர்வால் கொரோனாவுக்கு பலி!

கே.கே.அகர்வால்

இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும் பத்மஸ்ரீ விருதை பெற்றவருமான கே.கே.அகர்வால் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.  அவருக்கு வயது 62.

  • Share this:
    இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும் பத்மஸ்ரீ விருதை பெற்றவருமான கே.கே.அகர்வால் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.  அவருக்கு வயது 62.

    இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராக இருந்தவர் மருத்துவர் கே.கே.அகர்வார்.  இதய சிகிச்சை  நிபுணரான அவர், அதன் பின்னர் இதய பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவராக இருந்து வந்தார். இவரது சிறந்த சேவையை பாரட்டி மத்திய அரசு கடந்த  2010ம் ஆண்டு கே.கே.அகர்வாலுக்கு பதம்ஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.

    இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலை பரவியபோதே அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.  கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளான கே.கே.அகர்வால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.  இந்நிலையில்,  சிகிச்சை பலனின்றி கே.கே.அகர்வால் நேற்று இரவு உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,   ‘கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர் கே.கே.அகர்வால், 17ம் தேதி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பெருந்தொற்று நேரத்திலும்  அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த கே.கே.அகர்வால்,  தனது வீடியோக்கள் மற்றும் வகுப்புகள்   மூலம் 100 கோடிக்கும் அதிகமான மக்களிடம் சென்றடைந்துள்ளார்.

    தனது வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியது என்பதால் யாரும் வருந்தக் கூடாது என கே.கே.அகர்வால் கூறியதாக அவரது உறவினர்கள் தகவல் பகிர்ந்துள்ளனர்.

    கே.கே. அகர்வாலில் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: