கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க இந்தியர்களைப் போல வணக்கம் சொல்ல வேண்டும் - இஸ்ரேல் பிரதமர் அறிவுரை

ஊழல் குற்றச்சாட்டில் நெதன்யாகு மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் பதவி விலக வலியுறுத்தி கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

coronavirus | ”பல்வேறு தற்காப்பு செயல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றன”

 • Share this:
  கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க இஸ்ரேலியர்கள் கைகுலுக்கலை தவிர்த்து இந்தியர்களைப் போல வணக்கம் சொல்ல வேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

  சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகெங்கும் பரவி வருகிறது. இதுவரை 67 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க, அதிகளவில் மக்கள் கூட வேண்டாம் எனவும் கைக்குலுக்குவதோ, முத்தமிடுவதோ கூடாது உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு செயல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இனி இஸ்ரேலியர்களும் இந்தியர்களை போலவே வணக்கம் செல்ல வேண்டும் என்ரு தெரிவித்தார். அப்போது எவ்வாறு வணக்கம் வைக்க வேண்டும் என்பதனை நெதன்யாகு செய்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


    Also see...

   
  Published by:Vaijayanthi S
  First published: