ஆன்லைன் கல்வி: தேவையற்ற வீடியோக்கள் வந்தால் காவல் நிலையத்தில் புகார் செய்யவேண்டும்: மத்திய அரசு

ஆன்லைன் மூலம் கல்வி பயிலும் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால், அது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் கல்வி: தேவையற்ற வீடியோக்கள் வந்தால் காவல் நிலையத்தில் புகார் செய்யவேண்டும்: மத்திய அரசு
மாதிரிப் படம்
  • Share this:
ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் சைபர் சட்டப் பிரிவு சார்பில் அதன் விஞ்ஞானி தவால் குப்தா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்க முடியாது என்பதால், மாணவர்கள் தடையில்லாமல் தொடர்ந்து கல்வி கற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய - மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.


மனுதாரர் கோரிக்கைகளை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஏற்கனவே உருவாக்கிவிட்டது. ஆன்லைன் வகுப்புகளின்போது தேவையற்ற வீடியோ அல்லது இணையதள இணைப்புகள்
தொடர்பாக "இந்தியன் கணினி அவசர சேவை குழு" அவ்வப்போது எச்சரிக்கை தகவல் வழங்கி கொண்டே இருக்கும். இந்த சேவை குழு 2020-ஆம் ஆண்டில் மட்டும், 39 அறிவுரை தகவல்களை அனுப்பியுள்ளன.

மாணவர்களுக்கு இந்த குழுவின் அறிவுரைகளின்படி, மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வகுப்புகளை மிகவும் பாதுகாப்பாக நடத்த வழிவகை செய்கிறது. மேலும் இவற்றை மீறி தேவையற்ற விடியோக்கள் ஆன்லைன் வகுப்பின்போது வந்தால், அது தொடர்பாக மனுதாரர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்ய முழு உரிமை உள்ளது.மத்திய அரசை பொருத்தவரை பொது முடக்கத்தால் மாணவர்களின் கல்வி தடைப்படக் கூடாது என்ற கொள்கையுடன் செயல்படுகிறது. தற்போது ஆன்லைன்
வகுப்புகள் வளர்ந்து வரும் ஒரு கல்வி பயிற்றுவிக்குக்கும் முறையாக மாறி உள்ளது.

உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள அசாதாரண சூழலில் ஆன்லைன் வகுப்புகள், கல்வி பயிற்றுவிக்கும் தொழில்நுட்ப முறையிலான ஒரு மாற்று வழியாக மாறி வருகிறது.

மேலும் படிக்க...

சசிகலா முன்கூட்டியே விடுதலையா? உண்மை என்ன..? கர்நாடக சிறைத்துறை விளக்கம்

இந்த வழக்கில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த வழக்கு ஜூலை 6-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading