அவென்ஜர்ஸ் பிரபலத்திற்கு கொரோனா உறுதி: ட்விட்டரில் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு..!

மார்வல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளதாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவென்ஜர்ஸ் பிரபலத்திற்கு கொரோனா உறுதி: ட்விட்டரில் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு..!
இட்ரிஸ் எல்பா
  • Share this:
மார்வல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை எனக்கு எந்த அறிகுறிகளும் தெரியவில்லை. கொரோனா தொற்று உடைய நபரை நான் சந்தித்தேன். அவருக்கு ரிசல்ட் பாசிட்டிவ் என வந்துள்ளது. எனக்கு தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டேன்.

Also read: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Coronafighters.. ரியல் ஹீரோக்களுக்கு குவியும் பாராட்டுக்கள்!


இன்று காலை கொரோனா தொற்று எனக்கு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனை தடுக்க கைகளை நன்கு கழுவ வேண்டும். மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ட்விட்டரில் இட்ரிஸ் எல்பா வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading