கொரோனா: சென்னையில் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா? - ஆய்வுக்காக பத்தாயிரம் பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்க முடிவு

சென்னையில் கொரோனா சமூகப் பரவல் எனும் நிலையை எட்டியுள்ளதா என்பதை ஆய்வு செய்ய 10 நாட்களில் பத்தாயிரம் பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளது.

கொரோனா: சென்னையில் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா? - ஆய்வுக்காக பத்தாயிரம் பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்க முடிவு
கொரோனா பிறபொருள் எதிரிகள். (படம்: Reuters)
  • Share this:
சென்னையில் இதுவரை 83,377 நபருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதித்துள்ளது. அதில், 1,376 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 5 லட்சம் நபரிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் ஆய்வு ஒன்றை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்தது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 69 நகரங்களில் நடத்தப்படும் இந்த ஆய்வின் மூலம் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைக் கொண்டு சமூகத்தில் கொரோனா பரவல் எந்த நிலையில் பரவி உள்ளது என்பது கண்டறியப்படும்.

ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்படி பல்வேறு இணை நோய் உள்ளவர்கள், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்கள், தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்புத் துறை ஊழியர்கள், காவல் துறையினர், ஊடகத் துறையினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள், உள்ளாட்சித் துறை ஊழியர்கள், பொதுப் போக்குவரத்து ஊழியர்கள், வங்கி - அஞ்சல் சேவை ஊழியர்கள், அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் ஊழியர்கள், விமானத் துறை ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.


Also read: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை மொழிபெயர்ப்பில் தாமதம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

இதனைத் தவிர்த்து சமூகத்தில் ஆய்வு செய்யும் வகையில் பொது மக்களிடம் இருந்தும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இந்த ஆய்வை நடத்த ஐசிஎம்ஆர் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, ஐசிஎம்ஆர் மற்றும் சென்னை காசநோய் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஆய்வை நேற்று முதல் தொடங்கி நடத்தி வருகிறது. நேற்று ராயபுரம், அம்பத்தூர், அண்ணா நகர் உள்ளிட்ட 3 மண்டலங்களில் இந்த ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. சென்னையில் 10 நாட்கள் நடத்தப்பட உள்ள இந்த ஆய்வில் மொத்தமாக 12,000 மாதிரிகளைச் சேகரிக்க ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading