சமூக பரவல் இருக்கிறதா, இல்லையா? - நோய் எதிர்ப்புத்திறன் மூலம் கண்டறியும் ஆய்வை நடத்துகிறது ஐ.சி.எம்.ஆர்.
இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் பொதுமக்களிடம் ஆய்வு நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர்
- News18 Tamil
- Last Updated: July 14, 2020, 7:52 AM IST
இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் பொதுமக்களிடம் ஆய்வு நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.இந்த ஆய்வின் மூலம், பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களில் உள்ள 69 நகரங்களில் இந்த ஆய்வை நடத்த ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, திருவண்ணமலை மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.
சென்னையில் 50,000 நபர்களிடம் நடத்தப்பட உள்ள இந்த ஆய்வு ஜூலை 20 முதல் துவங்கப்பட உள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் சென்னை காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த ஆய்வை நடத்தவுள்ளது. பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்படும் ரத்த மாதிரிகள் எலிசா பரிசோதனை முறையில் சோதனை செய்யப்பட்டு ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்படும். அதன்பிறகு, நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இல்லை என்பதை கண்டறிய முடியும்.
இணை நோய் உள்ளவர்கள், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ளவர்கள், தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள், காவல் துறையினர், ஊடக துறையினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சாலையோர வியபாரிகள் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள், உள்ளாட்சி துறை ஊழியர்கள், பொது போக்குவரத்து ஊழியர்கள், வங்கி, அஞ்சல் சேவை ஊழியர்கள், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் ஊழியர்கள், விமான துறை ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.
மேலும் படிக்க:-மாஸ்க் இல்லாவிட்டால் பொருட்கள் வாங்கமுடியாது: சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள் என்னென்ன? முழுதும் படியுங்கள்..
சென்னையில் இந்த ஆய்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் பாதித்த இடங்கள் உள்ளிட்ட ஆய்வு நடத்துவதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களில் உள்ள 69 நகரங்களில் இந்த ஆய்வை நடத்த ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, திருவண்ணமலை மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.
சென்னையில் 50,000 நபர்களிடம் நடத்தப்பட உள்ள இந்த ஆய்வு ஜூலை 20 முதல் துவங்கப்பட உள்ளது. ஐசிஎம்ஆர் மற்றும் சென்னை காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த ஆய்வை நடத்தவுள்ளது.