தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்..! எச்சரிக்கும் மருத்துவர்

”பொதுவாக ஒரு தடுப்பூசி ஆய்வு தொடங்கி மக்கள் பயன்பாட்டுக்கு முழுவதுமாக வருவதற்கு 10-15 ஆண்டுகள் ஆகும்”

தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்..! எச்சரிக்கும் மருத்துவர்
தொற்று நோய் சிறப்பு மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை எதிர்கொள்ள தடுப்பூசி தயாரிப்பினை அதிவேக படுத்துவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் பாதுகாப்பை விடவும் ஆபத்துகள் அதிகம் என்று தொற்று நோய் இயல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் முக கவசம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதை விரிவுபடுத்துவது அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஐசிஎம்ஆர் நிறுவனமும், பாரத் பயோ டெக் நிறுவனமும் இணைந்து இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியை முடுக்கிவிட்டு இருக்கின்றன. அனைத்து வகையான அனுமதிக்கும் எவ்வித தேவையற்ற காலதாமதம் இல்லாமல் விரைவாக செயல்பட உள்ளதாக தெரிவிக்கின்றனர்.


உலகம் முழுவதும் 17 வகையான தடுப்பூசி ஆராய்ச்சிகள் முக்கிய கட்டத்தை எட்டி இருக்கின்றன. எனினும் 18 மாதங்கள் கழித்துத்தான் முதல் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வருவது சாத்தியம் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்திருக்கிறது.

இந்நிலையில் தொற்று நோய் சிறப்பு மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன் கூறுகையில், "தடுப்பூசி கண்டுபிடிப்பு மட்டுமல்லாது அதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன பக்க விளைவுகள் என்ன? என்பதை ஆய்வு செய்து, அதன் மூலம் நோய் தடுப்பு சாத்தியம் என்று நிறுவப்பட்டால் மட்டுமே மக்களுக்கு தடுப்பூசி விநியோகிக்க முடியும்.
 

கோடிக்கணக்கான மக்களுக்கு அதை விநியோகிக்க சில மாதங்கள் காலமெடுக்கும். சில தடுப்பூசிகளுக்கான பக்க விளைவுகள் சில ஆண்டுகள் கழித்து தான் தெரியும். பொதுவாக ஒரு தடுப்பூசி ஆய்வு தொடங்கி மக்கள் பயன்பாட்டுக்கு முழுவதுமாக வருவதற்கு 10-15 ஆண்டுகள் ஆகும்.

Also read... கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.க்கள் நலமுடன் உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

அதை வேகப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். மக்கள் உயிர் காப்பதற்கு அவசர அவசிய நடவடிக்கையாக இருப்பது போதுமான முக கவசங்கள், தனி மனித இடைவெளியே" என்றார்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading