பந்தில் பவுலர் எச்சில் தடவினால் எதிரணிக்கு கூடுதல் ரன் - ஐசிசி புதிய விதிமுறைகள்

கிரிக்கெட் போட்டிகளில் பந்தில் உமிழ்நீர் தடவ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. கொரோனாவில் இருந்து வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்க பல்வேறு விதிமுறைகளை ஐசிசி வகுத்துள்ளது.

பந்தில் பவுலர் எச்சில் தடவினால் எதிரணிக்கு கூடுதல் ரன் - ஐசிசி புதிய விதிமுறைகள்
கோப்புப்படம்
  • Share this:
கொரோனா மாற்று வீரருக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது. அத்துடன் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, டெஸ்ட் போட்டியின்போது வீரர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால், அவருக்கு நிகரான மாற்று வீரரை போட்டி நடுவரே தேர்வு செய்வார் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இதில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் மாற்று வீரருக்கு அனுமதி கிடையாது என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

பழக்க தோஷத்தில் உமிழ்நீரை ஒரு முறை தடவினால் நடுவர்கள் மன்னித்துவிடுவர் என்றும் பவுலிங் அணியினர் இருமுறைக்கு மேல் உமிழ்நீரை தடவினால், பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் உபரியாக வழங்கப்படும் என்றும் ஐசிசி கூறியுள்ளது.


சர்வதேச போட்டிகளுக்கு பொது நடுவர் முறை தற்காலிகமாக கைவிடப்பட்டு ஐசிசி அங்கீகரித்த உள்ளூர் நடுவர்களும், நிர்வாகிகளுமே போட்டியை நடத்துவர். ஜூலை 8 முதல் இங்கிலாந்தில் அந்நாட்டுக்கும் மேற்கிந்திய தீவு அணிகளுக்குமிடையே துவங்கும் தொடரில் புதிய விதிமுறைகள் அமலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஊக்க மருந்து புகார் - தமிழகத்தைச் சேர்ந்த கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு; 4 ஆண்டுகள் தடை 

First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading