கொரோனோ தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட பின் மிகுந்த உத்வேகத்தை உணர்கிறேன்: அப்போலோ சேர்மேன் பிரதாப் சி ரெட்டி
கொரோனோ தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட பின் மிகுந்த உத்வேகத்தை உணர்கிறேன்: அப்போலோ சேர்மேன் பிரதாப் சி ரெட்டி
அப்போலோ சேர்மேன் பிரதாப் சி ரெட்டி
கொரோனோ தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு 45 நிமிடங்கள் கடந்து விட்டேன் எனக்கு தற்போது மிகுந்த உத்வேகத்தை பெற்றது போல் உணர்கிறேன் என்று அப்போலோ சேர்மேன் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்,
கொரோனோ தடுப்பூசி குறித்த எந்த சந்தேகமும் மக்களுக்கு தேவை இல்லை இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருந்து எனவே தமிழக மக்கள் அனைவரும் உங்களுக்கான நேரம் வரும் பொழுது நீங்கள் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அப்போலோ சேர்மேன் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனோ தடுப்பூசி செலுத்துவதால் நமக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்ற எண்ணம் தவறானது. அந்த எண்ணம் எனக்கு முற்றிலும் கிடையாது. நான் கொரோனோ தடுப்பு ஊசியை எடுத்துக்கொண்டு தற்பொழுது நலமுடன் இருக்கிறேன் என்றார்.
நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிகச் சிறப்பான முறையில் சுகாதாரத்துறை செயல்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் அத்தனை ஏற்பாடுகளும் தமிழக அரசு துரிதப்படுத்தி உள்ளது சிறப்பாக இருக்கிறது. எனவே அனைவரும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.