போராட்டங்களை எதிர்கொள்வதற்கான நல்ல நிலையில் தான் இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பிற்குப் பிறகு இன்று பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் ட்ரம்புக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Also read: நடிகர்கள் கட்சியில் சேர்ந்தால் இரு திராவிட கட்சியினரும் அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள் - குஷ்பு இணைவு குறித்து எஸ்.ஆர்.சேகர் கருத்து
ட்ரம்பிடமிருந்து தொற்று பரவும் அபாயம் இல்லை என வெள்ளை மாளிகை மருத்துவர் சான் கான்லி கூறியுள்ளபோதும், கொரோனா வைரஸ் பரிசோதனையில் ட்ரம்புக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததா என்பதை தெரிவிக்கவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப், சீன வைரஸை, தான் முறியடித்துவிட்டதாகவும் தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி வந்திருப்பதால் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
ஆரம்பம் முதலே கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம் என்று அமெரிக்க அரசு சொல்லி வருகிறது. அதேபோல், சீன அரசு இந்த விஷயத்தில் அமெரிக்காவை குற்றம் சாட்டி வருகிறது. சீனாவில் கொரோனா பரவும் முன்னரே அமெரிக்காவில் அது பரவிவிட்டதாக அது கூறுகிறது. இது தொடர்பான சர்ச்சைக் கருத்துகள் பல மாதங்களாக பேசப்பட்டு வரும் நிலையில், ட்ரம்ப் கொரோனாவை சீன வைரஸ் என்று குறிப்பிட்டு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.