கோவிட்-19 : ஹூண்டாய் சென்னை ஆலையில் 5 நாட்களுக்கு பணிகள் தற்காலிக நிறுத்தம்!

ஹூண்டாய்

தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 2021 மே 25 முதல் 2021 மே 29 வரை ஆலை நடவடிக்கைகளை 5 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ஹூண்டாய் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  • Share this:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிர நிலைக்கு சென்ற நிலையில், ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் அதிகமாகவே பதிவாகி வருகிறது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் இந்த எண்ணிக்கை குறையாத காரணத்தால், தற்போது தொற்று சங்கிலியை உடைக்க தீவிர கட்டுப்பாடுகள் மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று நோயின் இரண்டாவது அலை மற்றும் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செவ்வாய்க்கிழமை (மே 25) துவங்கி 5 நாட்களுக்கு தனது சென்னை ஆலையின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் தொற்று பரவாமல் தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளுடன் மே 24 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 1 வாரம் அமல்படுத்தப்படும் என கடந்த சனிக்கிழமை தமிழக அரசு அறிவித்தது.

ALSO READ | கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளுக்கு மிகவும் சவாலாக இருக்குமா..?

இதனை அடுத்து "தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 2021 மே 25 முதல் 2021 மே 29 வரை ஆலை நடவடிக்கைகளை 5 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ஹூண்டாய் நிர்வாகம் முடிவு செய்து இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் ஹூண்டாய் நிர்வாகம் வெளியிட்டது. தனது ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவிட் -19 தொற்று இரண்டாவது அலையின் போது, நிறுவனம் பணியாளர்களை மேம்படுத்த மற்றும் ஆதரவளிக்க தேவையான பல முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த வாரம், நிறுவனத்தின் CSR arm Hyundai Motor India Foundation (HMIF) கோவிட் -19 தொற்று நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.10 கோடி பேக்கேஜை வழங்கியது. இந்த நிவாரண நிதியானது ரூ. 5 கோடி ரொக்கம் மற்றும் ரூ.5 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதை உள்ளடக்கியது.

ALSO READ | கொரோனாவால் உயிரிழந்தால் ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை முழு சம்பளம் : டாடா ஸ்டீல் அறிவிப்பு

இதில் ரூ.5 கோடி ரொக்கம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. இந்த தொகை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ. 5 கோடி கொண்டு பிபிஐ கிட், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஹை ஃப்ளோ நாஸல் ஆக்சிஜன் மெஷின்ஸ், பிபாப் மெஷின்ஸ் உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட இருக்கின்றன.

தவிர தண்டையார்பேட்டை மற்றும் தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கவும் உதவிகள் வழங்கப்பட உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போதும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுன்டேஷன் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: