’கொரோனா ஹெல்மெட்’ அணிந்து போக்குவரத்துக் காவலர்கள் பேரணி!

கொரோனா ஹெல்மெட்டுடன் போக்குவரத்துக் காவலர்கள்.

முன்னதாக, தமிழக காவல்துறையைச் சார்ந்த ஒருவர் இதே பாணியில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  • Share this:
    ஹைதராபாத்தின் மாலாக்பேட்டில் போக்குவரத்துக் காவலர்கள் ’கொரோனா ஹெல்மெட்’ அணிந்து பேரணி போயிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    ஹைதராபாத் போக்குவரத்துக் காவலர்கள் கொரோனா வைரஸ் வடிவிலான ஒன்றை  தம்முடைய தலைக்கவசத்தில் ஒட்டிக்கொண்டு ஊரைச் சுற்றி வலம் வந்துள்ளனர். கொரோனா வைரசின் அபாயம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டவும் ஊரடங்கு உத்தவரவை முறையாகக் கைபிடிக்க வலியுறுத்தியும் இந்தப் பேரணியை நேற்று நடத்தியிருக்கின்றனர்.

    அப்போது பாதுகாப்பாக இருக்குமாறும் வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தி பதாகை ஏந்திச் சென்றுள்ளனர்.

    முன்னதாக, தமிழக காவல்துறையைச் சார்ந்த ஒருவர் இதே பாணியில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    Also see:












    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



    Published by:Rizwan
    First published: