33 ஆண்டுகள் முயன்றும் முடியாத பத்தாம் வகுப்பு தேர்ச்சி - கொரோனாவால் கிடைத்த வெற்றி

33rd Time Lucky: Hyderabad Man is Finally a Matric Pass after Mass Promotion due to Covid-19

33 ஆண்டுகள் முயன்றும் முடியாத பத்தாம் வகுப்பு தேர்ச்சி - கொரோனாவால் கிடைத்த வெற்றி
தேர்ச்சி பெற்றவர்
  • News18
  • Last Updated: July 31, 2020, 8:04 PM IST
  • Share this:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 33 ஆண்டுகள் முயன்றும் பெற முடியாத 10ம் வகுப்பு தேர்ச்சியை கொரோனா உதவியால் ஒருவர் பெற்றுள்ளார்.

எம்.டி.நூருதீன் என்ற அந்த நபர் கடந்த 1987ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தை எழுதி வந்துள்ளார். எனினும் இதுவரை அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. இந்தாண்டு தேர்விற்கு விண்ணப்பித்திருந்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அந்த மாநில அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக நூருதீனும் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற்று 33 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 10 ம் வகுப்பில் வென்றுள்ளார்.


கொரோனா காலத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு தனது 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு உதவிய முதலமைச்சருக்கு நூருதீன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading