முகப்பு /செய்தி /கொரோனா / Ramananda Theertha : கொரோனாவை வென்ற 110 வயது நபர் - அதுவும் ஸ்டைலா.. கெத்தா!

Ramananda Theertha : கொரோனாவை வென்ற 110 வயது நபர் - அதுவும் ஸ்டைலா.. கெத்தா!

கொரோனாவை வென்ற 110 வயது நபர்

கொரோனாவை வென்ற 110 வயது நபர்

110 வயதாகும் தீர்த்தா கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகியிருப்பது நிச்சயம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தகவலாக இருக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. முதலில் இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்களுக்கு மட்டுமே அதிக பாதிப்பு என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆக்ஸிஜன் கட்டாயம் கொடுத்தாக வேண்டிய கட்டத்தில் அரசு மருத்துவமனைகள் முன்பு காத்துக்கிடக்கின்றனர்.

அரசு மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வரும் நிலையில், சராசரியாக ஒவ்வொரு அரைமணி நேரமும் ஒரு ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வருகிறதாம். அதில் பெரும்பாலானோர் ஆக்ஸிஜன் வசதி தேவையுடன் இருக்கிறார்கள். இப்படியே போனால் நிலைமை இன்னும் மோசமாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மாதிரி சூழ்நிலைகள் ஒருபுறம் மக்களை பயமுறுத்தி வரும் நிலையில், ஆங்காங்கே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் செய்திகளும் வெளியாகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தெலங்கானா மாநிலம் கீஸரா என்ற ஊரில் உள்ள ஆஸ்ரமத்தின் சாமியார் ரமணாந்தா தீர்த்தாவிற்கு (Ramananda Theertha) 110 வயதாகிறது. அவர் இந்தியாவில் அதிக வயதான நபராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

ALSO READ : கொரோனா பாதித்த இரண்டு உயிர்களை காப்பாற்றிய போலீஸ் அதிகாரி - குவியும் பாராட்டு!

இந்நிலையில் அவர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனாவிலிருந்து அவர் முற்றிலும் குணமாகியுள்ளார். இதனையடுத்து இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அதன் பிறகு அவர் ஆக்ஸிஜன் இல்லாத படுக்கைக்கு அவர் மாற்றப்படுவார். அவருக்கு திரவ உணவுகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தீர்த்தா தனது வாழ்நாளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இமையமலையில் கழித்திருக்கிறார். சில வருடங்களுக்கு இதே மருத்துவமனையில் அவருக்கு காலில் ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. 110 வயதாகும் தீர்த்தா கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகியிருப்பது நிச்சயம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தகவலாக இருக்கிறது.

ALSO READ : ஆம்புலன்ஸில் ஊழியரால் பெண் கொரோனா நோயாளிக்கு பாலியல் துன்புறுத்தல்! - கேரளாவில் அதிர்ச்சி..

கொரோனா இரண்டாவது அலையையே மக்கள் சமாளிக்க முடியாமல் திணறி வரும் வேளையில், மூன்றாவது அலை இன்னும் மோசமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். தற்போது சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் மாதத்திற்கு சராசரியாக 6 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்கின்றன.

இந்த நிலை நீடித்தால் மக்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் அதற்குள் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்றும் எச்சரிக்கும் அவர்கள் இதற்கு வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகள் இறக்குமதியை அதிகரித்தும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதுமே இதற்கு தீர்வு என்றும் கூறுகின்றனர். ஆனாலும் நிபுணர்களின் கணிப்பு படி நிலைமை மோசமாகாமல் அரசு துரித நடவடிக்கை எடுத்து மக்களின் உயிரை காக்கும் என்று நம்புவோம்.

First published:

Tags: Corona, CoronaVirus, COVID-19 Second Wave