கொரோனா அச்சத்தால் குழந்தையை கொன்று கணவன் மனைவி தற்கொலை

கோப்புப்படம்

கொரோனா அச்சத்தால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில் வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 • Share this:
  சேலத்தில் கொரோனா அறிகுறி காரணமாக அச்சத்தில் குழந்தையை கொன்று கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  சேலம் தாதகாப்பட்டி மூனாங்கரடு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவருக்கு பவித்ரா என்ற மனைவியும் ஐந்து வயதில் நந்திதா என்ற பெண் குழந்தையும் இருந்தது. நேற்று கோபிநாத்தின் வீட்டிற்கு சென்ற அவரது தாய், கதவை தட்டிய போது, கதவு திறக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது குழந்தை இறந்து கிடந்ததும், கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அன்னதானப்பட்டி காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  ALSO READ  : அதிகரிக்கும் கொரோனா: செங்கல்பட்டில் தற்காலிக மருத்துவமனைகளாக மாறும் கல்லூரிகள்!

  கொரோனா அச்சத்தால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில் வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: