• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • மலேசியாவில் தவிக்கும் தமிழர்கள் - இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மலேசியாவில் தவிக்கும் தமிழர்கள் - இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

News 18

News 18

மலேசியா போலீசார், தமிழர்களை சிறைபிடித்து துன்புறுத்தி வருவதாக இளையான்குடியைச் சேர்ந்த சிலர் அங்கிருந்து வாட்ஸ் அப் வழியே தகவல் அனுப்பியுள்ளனர். 

  • Share this:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தபலர் மலேசியாவில் வசித்து வருகின்றனர். சுற்றுலா விசா, பணி விசா என பல்வேறு விசாக்களில் தங்கியுள்ள இவர்கள் ஊரடங்கு காரணமாக விமான சேவை நிறுத்தப்ப்டடதால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் மலேசியா போலீசார், தமிழர்களை சிறைபிடித்து துன்புறுத்தி வருவதாக இளையான்குடியைச் சேர்ந்த சிலர் அங்கிருந்து வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளனர்.

இந்திய தூதரகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் சிறுபான்மை தலைவர் அம்பலம் ராவுத்தர் கூறுகையில்,“ மலேசியாவில் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மலேசியன் மேன்சனில் போலீஸ் மற்றும் இம்மிகிரேசன் அதிகாரிகள் வந்து லாக் டவுன் உள்ள நேரத்தில் மேன்சனில் உள்ள 8 மாடிகள். மேடவர் சிட்டி, ஒன் பிஸா போன்ற 3 இடங்களில் திடீர் என வந்து அனைத்து மக்களையும் கீழே இறக்கி வீடுகளில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் கைவிலங்கு போட்டு குற்றவாளிகள் போல் நடத்திய அரசை கண்டிக்காமல் இந்திய தூதரகம் வேடிக்கை பார்க்கிறது.

பெரிய கல்யாண மஹால் போன்ற மண்டபத்தில் அடைத்து சுமார் 2 ஆயிரம் பேர் மேல் இருக்கும் அனைவரையும் இமிகிரேசன். பாஸ்போட் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். இதில் பெர்மிட் உள்ளவர்கள், சுற்றுலா விசாவில் வந்தவர்கள் அனைவரும் சோதனை செய்யப்பட்டனர். இதில் மார்ச் மாதம் வந்த சுற்றுலா பயணிகள் பல பேரை அடிக்கடி வந்ததாக கூறி கைது செய்து உள்ளனர். சட்ட விரோதமாக மற்றும் பெர்மிட் இல்லாதாவர்கள் பெர்மிட் இருந்து பாஸ்போட் கையில் இல்லாதவர்கள் என சுமார் 200 பேருக்கு மேல் கைது செய்து உள்ளனர். அங்கு உள்ள அதிகாரிகள் காட்டுமிராண்டிதனமாக நடந்து கொண்டனர்.

முஸ்லீம் மக்கள் ரம்ஜான் நோன்பு வைத்து உள்ள நிலையிலும் கைது செய்து அழைத்து சென்று விசாரணை என்ற பெயரில் கொடுமை செய்யப்படுகின்றனர்.. இதனை இந்தியா அரகம் தமிழக அரசும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பாக வேண்டுகின்றோம்.

எங்களை விசாரனை செய்த பிறகு பாதி பேரை அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் கொண்டு வந்து விட்டனர் என மலேசிய மேன்சனில் தங்கியுள்ள அம்பலம் ராவுத்தர் நைனார் தெரிவித்துள்ளார். இளையான்குடியைச் சேர்ந்த இவர் காங்கிரஸ் சிறுபான்மை தலைவராக உள்ளார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: