”கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என அறிவியுங்கள்” - WHO-ஐ வலியுறுத்தும் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள்..

”கொரோனா காற்றின் மூலமாகவும் பரவும்” (Airborne) என்று அறிவிக்கவேண்டும் என உலக அளவில் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளனர்.

”கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என அறிவியுங்கள்” - WHO-ஐ வலியுறுத்தும் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள்..
who
  • Share this:
கொரோனோ வைரஸ், காற்றில் இருக்கும் கண்ணுக்கு அகப்படாத நுண் துகள்களின் மூலமாக பரவி மனிதர்களுக்குப் பாதிப்பை விளைவிக்கக்கூடும். காற்றிலும் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் உலக சுகாதார அமைப்பு தனது முந்தைய பரிந்துரைகளைத் திருத்தி ”கொரோனா காற்றின் மூலமாகவும் பரவும்” (Airborne) என்று அறிவிக்கவேண்டும் என உலக அளவில் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளனர்.

தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவும். பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தொடும்போதும்       (Droplet Infection) கொரோனா பரவும் என உலக சுகாதார அமைப்பு முன்பு அறிவுறுத்தியது. இதை மாற்றி, கொரோனா Airborne Infection., அதாவது காற்றின் மூலம் பரவக்கூடிய நோயாக அறிவியுங்கள் என நூற்றுக்கணக்கான அறிவியலாளர்கள் (32 நாடுகளைச் சேர்ந்த 239 நிபுணர்கள்) உலக சுகாதார அமைப்பை வலியுறுத்தி வருவதாக தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க:-


"இறப்பு எண்ணிக்கையைக் குறைக்கவில்லை" - நிறுத்தப்பட்டது ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனை. மாற்றங்கள் என்ன?

Benedetta Allegranzi, உலக சுகாதார அமைப்பின் நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர், 'நியூயார்க் டைம்ஸ்' நாளேட்டுக்கு அளித்திருக்கும் பேட்டியில், “கொரோனா வைரஸ் நோய் காற்றில் பரவுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதைக் கடந்த இரண்டு மாதங்களாக ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறோம். கணிக்கிறோம். ஆனால், அதற்கான உறுதியான, நிலையான ஆதாரங்கள் இல்லாமல் அதை வெளியிடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

 
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading