கொரோனா தாக்கம்... பில்லியன் கணக்கில் கடன் கேட்கும் சீன நிறுவனங்கள்..!

சீன வங்கிகளில் கடன் கோரியிருக்கும் நிறுவனங்களுள் பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஜியோமி அதிகப்படியாகக் கடன் கேட்டுள்ளதாம்.

கொரோனா தாக்கம்... பில்லியன் கணக்கில் கடன் கேட்கும் சீன நிறுவனங்கள்..!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: February 11, 2020, 1:08 PM IST
  • Share this:
கொரோன வைரஸ் தாக்குதலால் ஒட்டுமொத்தமாக சீனா பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை முடங்கியுள்ளதால் கடுமையான நஷ்டத்தை சமாளிக்க நூற்றுக்கணக்கான சீன நிறுவனங்கள் வங்கிகளில் பில்லியன் கணக்கில் கடன் தொகை கேட்டுள்ளனர்.

இதுவரையில் சுமார் 300 சீன நிறுவனங்கள் நஷ்டத்தை சமாளிக்க 8.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கடன் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் பொருளாதாரம் 5 சதவிகித வீழ்ச்சியைச் சந்திக்கும் என உலகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் பல பொருட்களின் விநியோகம் சீனாவால் தடைபட்டுள்ளது.

சீன வங்கிகளில் கடன் கோரியிருக்கும் நிறுவனங்களுள் பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஜியோமி அதிகப்படியாகக் கடன் கேட்டுள்ளதாம். இதுவரையில் சீனாவில் ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


மேலும் பார்க்க: 4,600 கோடி ரூபாய்க்கு சொகுசு படகு வாங்கியுள்ள பில் கேட்ஸ்... கிறுகிறுக்க வைக்கும் வசதிகள்!
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்