முகக்கவசம் அணியாதவர்களால் ஒரே நாளில் ₹10.6 லட்சம் அபராதம் வசூல்..!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து செல்வோரிடம் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்

முகக்கவசம் அணியாதவர்களால் ஒரே நாளில் ₹10.6 லட்சம் அபராதம் வசூல்..!
கொரோனா பாதிப்பு
  • Share this:
சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனத்தில் சென்றவர்களிடம் ஒரே நாளில் 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களிலில் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கும் நிலையில் சென்னையில் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னையில் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்திலோ அல்லது நான்கு சக்கர வாகனத்திலோ சென்றால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று கூறினார். முகக் கவசம் அணியாமல் நடந்து செல்வோரிடம்  100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.


இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை போலீசார் அபராதமாக வசூலித்துள்ளனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading