கொரோனா காலத்தில் உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்..

குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்..

 கோவிட் - 19 மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என பயம் மக்கள் மத்தியில் உள்ளது. எதிர்காலத்தில் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள, மருத்துவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மூன்றாவது அலைக்கு தயார்படுத்தி பலப்படுத்துகின்றனர்.

  • Share this:
    கோவிட் -19 குழந்தைகள் மற்றும் இளையவர்கள் உட்பட யாரை  வேண்டுமானாலும் தாக்கும். கோவிட் -19 தொற்று குழந்தைகள் மத்தியில் குறைந்து அளவு இருந்தாலும் தொற்று ஏற்பட்டால், ஒன்று அறிகுறி இல்லாமல் இருக்கிறது அல்லது லேசான அறிகுறிகள் கொண்டு உள்ளது. இந்தியாவில் குழந்தைகள் மத்தியில் ஒரு சில  கேஸுகளில் மட்டுமே தீவிரமாக இருந்தது மற்றும் அவர்களுக்கு மருத்துவமனை தேவைப்பட்டது.   

    மேலும் மக்கள் மத்தியில் கோவிட் - 19 மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என பயம் உள்ளது. இருப்பினும், இதை உறுதி செய்ய எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இதுவரை இல்லை.2 முதல் அலையில், பெரியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள், இரண்டாம் அலையில், நிறைய இளையவர்கள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், மூன்றாவது அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுவர் என கணிக்கப்பட்டுள்ளது.  மேலும் மக்களிடம் கூடுதல் பயமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை மற்றும் அவர்கள் அதிகமாக பாதிக்கப்பட போகிறார்கள். எதிர்காலத்தில் இந்த சூழ்நிலையயை சமாளிக்க, மருத்துவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மூன்றாம் அலைக்கான தயார்நிலைகள் மற்றும் பாதுகாப்பினை பலப்படுத்தி உள்ளனர்.

    குழந்தைகளுக்கான கோவிட் - 19 யின் அறிகுறிகள்

    மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வழிமுறைகள் படி கோவிட் - 19 நிர்வாகத்தில் குழந்தை வயது பிரிவினருக்கு, முக்கிய கிருமியின் அறிகுறியாக சளி, இருமல், உடல் வலி, சோர்வு மட்டுமில்லாமல் அடிவயிறு வலி, வயிற்றுப்போக்கு, வாசனை மற்றும் ருசி இல்லாமல் இருத்தல் போன்றவை. விரைவாக இதனை கண்டறிந்து குழந்தைகளுக்கு கோவிட் - 19 சிகிச்சை கொடுப்பது மிக அவசியம். 3

    குழந்தைக்கு  கோவிட் - 19 தொற்று வந்துள்ளதா என்பதை கண்டறிய, குழந்தைக்கு பரிசோதனை செய்வது மிக அவசியம். ஒரு வேலை குழந்தை கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் உள்ள குடும்பத்தில் இருந்தாலோ அல்லது அவர்களுக்கு அறிகுறிகள் இருந்தாலோ அல்லது குழந்தைக்கு தொடர்ச்சியான காய்ச்சல் மூன்று நாட்களுக்கு இருந்தாலோ, மருத்துவரின் ஆலோசனை பெறவும் மற்றும் உங்கள் குழந்தையை பரிசோதித்து தனிமை படுத்தவும்.

    கோவிட்  - 19 பாசிட்டிவ் குழந்தை நிர்வாகம்

    ஒரு குழந்தைக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், முடிந்தால் குடும்பத்தில் மற்றவர்களிடம் இருந்து அவர்களை தனி அறையில் உடனடியாக தனிமைப்படுத்துவது மிக அவசியம் மற்றும் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அவர்கள் குடும்பம் குழந்தையுடன் தொலைபேசியில் அல்லது வீடியோ கால்களில் கண்டிப்பாக பேச வேண்டும் மேலும் நேர்மையாக பேசலாம்.

    ஒரு வேலை தாய் மற்றும் அவர்களின் குழந்தை கோவிட் - 19 பாசிட்டிவ் என கண்டறியப்பட்டால், அவர்களால் அந்த குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் அளவு இருந்தால் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் இருந்தால், குழந்தைகள் அவர்கள் தாயுடன் இருக்கலாம். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களால் முடிந்த வரை தாய்ப்பால் தரலாம். ஒரு வேலை, தாய் மட்டும் கோவிட் - 19 பாசிட்டிவ், மருத்துவமனையில் இல்லாமல் மற்றும் மிகுந்த நோய் வாய் பட்டிருந்து, ஆனால் குழந்தை நெகட்டிவாக இருந்தால் மேலும் குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் இல்லையென்றால், அம்மாக்களே குழந்தைகளை பார்த்துக் கொள்ளலாம். இருப்பினும், அது போன்று செய்யும் பொழுது சிறந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்றி உங்கள் முக கவசங்களை சரியாக போடவும்.

    குழந்தைகளிடம் பல உறுப்பு ஒவ்வாமை நோய் (MIS-C)4

    பொது சுகாதார சேவை நிர்வாகத்தின் குழந்தைகளுக்கான கோவிட் - 19 நிர்வாக வரைமுறைகள் படி, பல உறுப்பு ஒவ்வாமை நோய்  (MIS-C) பாதிக்கப்பட்ட குழந்தைகள் 2 முதல் 6 வாரத்திற்குள் கோவிட் - 19 -ல் இருந்து குணமைடைவர்.  குழந்தைகளிடம் உள்ள  MIS-C நோயின் பொதுவான அறிகுறிகள் உடல் உறுப்பு வீக்கம், இதயம், நுரையீரல், கிட்னி, மூளை, தோல், கண்கள் மற்றும் ஜீரண மண்டலம் உட்பட.  மேலும் காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, ராஷ், சிவந்த கண்கள், குழப்பம், அதிர்ச்சி மற்றும் சோர்வடைதல் போன்ற அறிகுறிகளும் வரலாம். MIS-C நோய் தாக்கத்தின் காரணம் தெரியவில்லை. இருப்பினும், நிறைய MIS-C பாதிக்கப்பட்ட குழந்தைகள் கோவிட் - 19 தொற்றால் முன்னர் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் கண்டறிவது மற்றும் மற்றும் மருத்துவ உதவியை நாடுவது MIS-C போன்ற கொடிய பாதிப்புகளில் இருந்து நம் குழந்தையை பாதுகாக்கும்.

    இந்தியா மற்றும் மற்ற நாடுகளில் குழந்தைகளுக்கு கோவிட் - 19 தடுப்பூசி

    தற்போது இந்தியாவில், தடுப்பூசி பெரியவர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வருகிறது. Covaxin (Phase II/III) மருத்துவ சோதனை ஓட்டம் இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு சோதனையில் உள்ளது5. ஒரு சில நாடுகளில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் தடுப்பூசி திட்டம் ஆரம்பித்து விட்டது. வெற்றிகரமான மருத்துவ சோதனை ஓட்டத்திற்கு பின் Pfizer-BioNTech 12 முதல் 15 வருடங்கள் வரை உள்ள குழந்தைகளுக்கு, இந்த தடுப்பூசியை அறிமுக படுத்தி உள்ளது. 6

    கோவிட் - 19 நோய்களின் பாதுகாப்பு முறை

    தற்போது, குழந்தையை கோவிட் - 19 -ல் இருந்து பாதுகாக்க சிறந்த வழி, சமூக இடைவெளி, சரியாக முகக்கவசம் அணிதல், கைகளை நன்கு சோப் மற்றும் ஆல்கஹால் சார்ந்த சானிடைசேர் மூலம் கழுவுதல் போன்ற கோவிட் 19 பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதே. பொது சுகாதார சேவை நிர்வாகத்தின் (DGHS) குழந்தைகளுக்கான கோவிட் - 19 நிர்வாக வரைமுறைகள் படி, ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டியது இல்லை, 6 முதல் 11 வயது கொண்ட குழந்தைகள் பெற்றோர்கள் பார்வையில் முக கவசம் அணிய வேண்டும் மேலும் 12 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.7

    உங்கள் நோய் எதிர்ப்பு திறனை எந்த ஒரு நோயிற்கு எதிராகவும் போராட வைக்க சத்தான உணவு உண்ணுதல் மற்றும் சத்தான உணவு காய்கறி மற்றும் பழங்கள் உட்பட தண்ணீர் குடித்தல் மிக அவசியம். 6 மாதத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு, தாய்ப்பால் மட்டுமே அவர்கள் நலத்திற்கு சத்தானது. தாய்ப்பால் உடன் கூடிய உணவு 6 மாதத்திற்கு பிறகு உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம். தடுப்பூசி சுழற்சி தொடர்ந்து நடைபெற வேண்டும்.

    குழந்தைகளின் மன நலத்தின் முக்கியத்துவம்

    இந்த கோவிட்- 19 காலத்தில் குழந்தைகளின் மன நலத்தை பார்த்துக் கொள்வது பெற்றோர்களுக்கு மிக முக்கியம். கோவிட் - 19 குழந்தைகளின் உடல் நலத்தை மட்டும் பாதிக்கவில்லை மன நலத்தையும் பாதிக்கிறது, இது மன அழுத்தம், எரிச்சல், மன சோர்வு, படபடப்பு மற்றும் பல அறிகுறிகள் கொடுக்கும். பெற்றோர்கள் அவர்களுக்கு தேவையானதை கொடுத்து அவர்களுடன் சிறந்த நேரம் செலவிடுவது அவசியம். அவர்கள் அவர்களின் நண்பர்களுடன் தொலைபேசியில் இணைப்பு செய்வது உதவலாம் மற்றும் அவர்களுக்கு உள்ளரங்க விளையாட்டுகள் ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.8

    ரேணுகா பீர்கோடியா,

    ஒருங்கிணைப்பாளர், கம்யூனிட்டி இன்வெஸ்ட்மென்ட்,

      United Way Mumbai

    குறிப்புகள் 

    1. https://www.mohfw.gov.in/pdf/ProtocolforManagementofCovid19inthePaediatricAgeGroup.pdf-

    2. https://thefederal.com/covid-19/no-basis-to-theory-that-third-wave-will-be-hard-on-teens-soumya-swaminathan/

    3. https://www.mohfw.gov.in/pdf/ProtocolforManagementofCovid19inthePaediatricAgeGroup.pdf-

    4. https://www.cdc.gov/mis-c/ and https://dghs.gov.in/WriteReadData/Orders/202106090336333932408DteGHSComprehensiveGuidelinesforManagementofCOVID-19inCHILDREN_9June2021.pdf

    5. https://covid19commission.org/commpub/preparing-for-covid-19-part-iii-planning-protocols-and-policy-guidelines-for-paediatrics

    6. https://www.cdc.gov/coronavirus/2019-ncov/vaccines/recommendations/adolescents.html

    7. https://dghs.gov.in/WriteReadData/Orders/202106090336333932408DteGHSComprehensiveGuidelinesforManagementofCOVID-19inCHILDREN_9June2021.pdf

    8. https://nimhans.ac.in/wp-content/uploads/2021/03/Taking-care-of-mental-health-of-children-and-Elderly-During-covid-19.pdf

    Published by:Tamilmalar Natarajan
    First published: