Home /News /coronavirus-latest-news /

கோவிட் -19 : உங்கள் காரின் வெளிப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது எப்படி.?

கோவிட் -19 : உங்கள் காரின் வெளிப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது எப்படி.?

காட்சிப் படம்

காட்சிப் படம்

தொற்றின் தீவிரத்திற்கு இடையிலும் இப்படி கார்கள் மற்றும் பிற வாகனங்களை பயன்படுத்தி வெளியே செல்லும் நபர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், உங்கள் கார் கோவிட் வைரஸால் மாசுபடவில்லை என்பதை எவ்வாறு உறுதி செய்வது?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நாடு முழுவதும் மக்கள் மீண்டும் கொரோனா பீதியை அனுபவித்து வருகிறார்கள். தொற்று வேகமெடுத்துள்ள நிலையில் மக்கள் ஒருவருக்கொருவர் கூட்டமாக அருகில் நிற்கவோ அல்லது எதையும் தொடவோ விரும்பவில்லை. நாளுக்கு நாள் கொரோனா புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில், பலர் வீடுகளுக்குளேயே முடங்கி உள்ளனர். ஆனால் தொற்றுக்கு மத்தியிலும் பணி நிமித்தமாகவோ அல்லது அத்தியாவசிய காரணங்களுக்காகவோ வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியே ஒரு சில செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களில் சிலர் தங்கள் கார்களை பயன்படுத்தி வெளியே செல்கிறார்கள்.

தொற்றின் தீவிரத்திற்கு இடையிலும் இப்படி கார்கள் மற்றும் பிற வாகனங்களை பயன்படுத்தி வெளியே செல்லும் நபர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், உங்கள் கார் கோவிட் வைரஸால் மாசுபடவில்லை என்பதை எவ்வாறு உறுதி செய்வது? இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் , காரின் வெளிப்புறத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஆய்வு முடிவுகளின் படி, வைரஸ் ஒரு சில மேற்பரப்புகளில் சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கும். உயிர்கொல்லி கொரோனவால் கிட்டத்தட்ட எந்த மேற்பரப்பும் மாசுபடலாம். கார் கதவு கைப்பிடிகள், ஸ்டீயரிங் அல்லது ஹேண்ட்பிரேக் உள்ளிட்டவற்றில் கூட இந்த கிருமி படிந்திருக்கலாம். குறிப்பாக பிளாஸ்டிக் மற்றும் உலோகம் உள்ளிட்டவற்றில் 3 நாட்கள் வரை தொற்ற கூடிய ஒரு வடிவத்தில் இந்த வைரஸ் நீடிக்கும். கோவிட் -19 எதையும் தொடர்பு கொள்கிறது என்று சொல்வது இங்கே சரியாக இருக்கும்.

வெளிப்புற கார் பராமரிப்புக்கான குறிப்புகள் :

கொரோனா வைரஸ் கிருமிகள் காரின் மேற்புறத்தில் இருந்தால் அவற்றை எவ்வாறு அகற்றுவது என்பதை பார்க்கலாம். காரின் வெளிப்புறங்களை சுத்தம் செய்ய சோப்பையும், தண்ணீரையும் பயன்படுத்தலாம். இங்கே சோப்பு என்பது அழுக்கு நீக்கும் கூட்டு பொருளாகும். உங்கள் வீட்டில் இருக்கும் எந்தவொரு கிளீனிங் சொல்யூஷனிலிருந்தும் சோப்பு மற்றும் தண்ணீர் கரைசலை தயாரித்து இதற்கு பயன்படுத்தலாம். இந்த கலவை மிகவும் செயல்திறன் மிக்கதாக இருக்கும் என்பதால் கைகளை குறிப்பிட்ட இடைவெளியில் சோப்பு மற்றும் நீரை பயன்படுத்தி கழுவ வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். கைகளை நன்கு கிருமிநீக்கம் செய்வது போலவே, இந்த கலவை காரின் வெளிபரப்புகளை சுத்தம் செய்ய கூடியது. காரின் வெளிப்புறத்தை சோப்பு (அழுக்கு நீக்கும் கூட்டு பொருள்) மற்றும் தண்ணீர் கலவையை நன்கு நுரைக்க எடுத்து கொண்டு நன்கு துடைத்து சுத்தப்படுத்தலாம்.

60-70 சதவிகித ஐசோபிரைல் ஆல்கஹால் உள்ளடக்கத்தைக் கொண்ட கிருமிநாசினி தயாரிப்புகளை பயன்படுத்தியும் கிருமி நீக்கம் செய்யலாம். ஆனால் இதை பயன்படுத்தும் முன் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய குறிப்புகளை படித்து தெளிவான பின் பயன்படுத்த வேண்டும். கதவு கைப்பிடிகள், கதவின் மேல் பகுதி, வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள், பூட் லிட் மற்றும் விண்ட்ஸ்கிரீன் போன்ற வெளிப்புறங்களுக்கு ஐசோபிரைல் ஆல்கஹால் கரைசலில் நனைத்த ஈரமான துடைப்பான்கள் மற்றும் டிஸ்யூ பேப்பர் அல்லது மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்தலாம்.

சிறந்த தூய்மைக்கு காரின் வெளிப்புறங்களை ஈரமான துடைப்பான்களால் (wet wipes)துடைத்தவுடன், சற்று ஈரமான துணியை பயன்படுத்தி மீண்டும் எல்லா பாகங்களையும் அழுத்தி துடைத்து விட வேண்டும். காரின் வெளிப்புறங்களை வாரத்திற்கு மூன்று முறையாவது துடைப்பது சிறந்தது. தண்ணீர் மிக விரைவாக ஆவியாகிவிடும் என்பதால், காரின் வெளிப்புறங்களை பகலில் சுத்தம் செய்ய வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Covid-19

அடுத்த செய்தி