ஹோம் /நியூஸ் /கொரோனா /

நீங்கள் ஆன்லைனில் அதிக நெகடிவ் நியூஸ்களை படிக்கிறீர்களா? அதை தவிர்க்கும் வழிமுறைகள் இதோ..

நீங்கள் ஆன்லைனில் அதிக நெகடிவ் நியூஸ்களை படிக்கிறீர்களா? அதை தவிர்க்கும் வழிமுறைகள் இதோ..

கொரோனா காலத்தில் அதிக போலி செய்திகளை படிப்பதன் மூலம் உடல்நலம், மனஉளைச்சல், நிம்மதியின்மை போன்றவை ஏற்படுகிறது.

கொரோனா காலத்தில் அதிக போலி செய்திகளை படிப்பதன் மூலம் உடல்நலம், மனஉளைச்சல், நிம்மதியின்மை போன்றவை ஏற்படுகிறது.

கொரோனா காலத்தில் அதிக போலி செய்திகளை படிப்பதன் மூலம் உடல்நலம், மனஉளைச்சல், நிம்மதியின்மை போன்றவை ஏற்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒரு சிலர் எப்போ பார்த்தாலும் போன்னும், கையுமாக இருப்பார்கள். சோசியல் மீடியாக்களில் போலியான செய்திகளை பரப்புவதன் மூலம் அவர்கள் பிரபலமடைய நினைக்கிறார்கள். அந்த நபர்கள் சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்புவதால் பலருக்கும் பல்வேறு உடல்நலம், மனஉளைச்சல், நிம்மதியின்மை போன்றவை ஏற்பட்டு அவர்களை விரக்தியில் ஆழ்த்துகின்றன, குறிப்பாக தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது இது இன்னும் மோசமடைகிறது. இந்த மோசமான போக்கை டூம்ஸ்க்ரோலிங் அல்லது டூம்சர்ஃபிங் என்று நிபுணர்கள் அழைக்கிறார்கள்.

டூம்ஸ்க்ரோலிங் என்றால் என்ன? 

டூம்ஸ்க்ரோலிங் என்பது ஆன்லைனில் காணப்படும் நெகடிவ் செய்திகளை நம்பி மனச்சோர்வடைதலை டூம்ஸ்க்ரோலிங் என்பர். இந்த வார்த்தையை குவார்ட்ஸின் பைனான்ஸ் ரிப்போர்ட்டர் கரேன் ஹோமுதன்முதலில் அக்டோபர் 2018ம் ஆண்டு ட்விட்டர் பதிவில் NPR article-லில் குறிப்பிட்டுள்ளார்.

several outlets did not interview me about doomscrolling but still mentioned my name and the reminders, like this one https://t.co/hVKuEyATkK

— Karen K. Ho (Doomscrolling Reminder Lady) (@karenkho) July 15, 2020

நாம் ஏன் டூம்ஸ்க்ரோல் செய்கிறோம் : 

டூம்ஸ்க்ரோலிங் அதன் வேர்களை நெகட்டிவிட்டி பயாஸ் என்று அழைக்கப்படும் ஒரு உளவியல் கொள்கையில் கொண்டிருக்கலாம் , இது மனிதர்களிடமும், விலங்குகளிலும் இருக்கும் ஓர் உள்ளுணர்வு. ஒரு ஆய்வின்படி, நேர்மறையான விஷயங்களை விட மக்கள் எதிர்மறை சம்பவங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது.  

நமது எதிர்கால நடத்தை, நமது கடந்தகால எதிர்மறை அனுபவங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மையான மற்றும் நம்பகமான செய்திகளைப் படித்தல் அல்லது பார்த்தல் சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து உங்களை எச்சரிக்கையாக வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும், அதிகமான நெகடிவ் நியூஸ்கள் உங்களுக்கு தீங்கைத்தரும்.

டூம்ஸ்க்ரோலிங் ஏன் தீங்கு விளைவிக்கிறது:

செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில்  முடிவில்லாத நெகடிவ் கன்ட்டன்டுகளின் மூலம் ஸ்க்ரோலிங் செய்வதால் அவை உங்களுக்கு மனச்சோர்வு, அமைதியற்ற நிலை மற்றும் கவலையை ஏற்படுத்துகிறது. இதனால் உங்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. பொதுவாக நெகட்டிவிட்டியைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது நம் ஆற்றல் மட்டங்களின் உற்சாகம் குறைகிறது. இருளின் மத்தியில் நம்பிக்கையைத் தேடும் முயற்சியில் நாம் அதிக நெகட்டிவிட்டியைத் திரும்பப் பெறுகிறோம். இது ஒரு தீய சுழற்சியாக மாறி நமது ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

கோவிட் -19 சர்வதேச பரவல் :

கொரோனாவால் மக்கள் அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள், அதோடு கூட தொற்றுநோயைத் தடுக்க நோயாளியின் குடும்பங்கள் நோயாளியை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பொதுவாக சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். நேரடியாக பேசுவதை தவிர்த்து ஒருவருக்கொருவரின் உரையாடல்கள் போன் கால்கள், வீடியோ மற்றும் சாட்களைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படுகின்றனர். அப்போது பல போலிச் செய்திகளை நாம் ஆன்லைனில் பார்க்கிறோம், அதில் தொற்றுநோயைப் பற்றிய பல போலிக் கதைகளைப் படிப்பதால், இது நம் கவலையை எழுப்புகிறது.

டூம்ஸ்க்ரோலிங் செய்வதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்:

ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது டூம்ஸ்க்ரோலிங் செய்வதற்கான சிறந்த மருந்தாகும். உடல் பயிற்சிகள், ஒரு புத்தகத்தைப் படிப்பது, படம் பார்ப்பது மற்றும் இசை கேட்பது ஆகியவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். .கவிதை எழுதுதல், ஓவியம், சிற்பம் போன்றவையும் நம்மை மோசமான மற்றும் வெறித்தனமான ஸ்க்ரோலிங் செய்வதிலிருந்து விலக்கி வைக்கும். 

பொதுவாக போலி செய்திகள் தான் விரைவில் பிரபலம் அடையும். அந்த வகையில் போலி செய்திகள் மக்களிடையே வேகமாக பரவி அவர்களுக்கு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி சில சமயங்களில் மோசமான முடிவுகளை எடுக்க வைக்கும் அளவிற்கு மக்களை தள்ளுகின்றன. நம்மில் ஒரு சிலர் செய்யும் இத்தகைய செயல்களால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Pandemic